கலைக்கப்பட்ட சபைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு.!

பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும் மாகாண சபைகளினூடாக வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவைகளையும் நாளாந்த நடவடிக்கைகளையும் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார். தற்போது பதவிக்காலம் நிறைவடைந்துள்ள வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10747

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் தீர்மானிக்கும்

in

விரிவாக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 3ம் கட்ட கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த கடன்திட்டத்தின் கீழ், 168 மில்லியன் டொலர்கள் படி இரண்டு கட்டக் கடன்வழங்கல்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளது. இதன்படி இதன் மூன்றாம் கட்ட கடனாக மேலும் 168 மில்லியன் டொலர்களை வழங்குவது தொடர்பில், …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10744

பிணை முறி மோசடி விவகாரம் : தேவையேற்படின் பிரதமர் ரணிலும் அழைக்கப்படுவார்.!

சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் தேவையேற்படின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளுக்காக, அழைக்கப்படுவார் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் இன்று நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும், குறிப்பிட்டார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10742

உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக்கூடாது என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அறிவிப்பு

ரோஹன ஹெட்டியாராச்சி

நுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி சபை எல்லைகளை அதிகரிப்பதைக் காரணம் காட்டி, உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக்கூடாது என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பில் இன்று கஃபே, பெஃப்ரல் உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. நுவரெலியா மற்றும் அம்பேகமுவ ஆகிய பிரதேச சபைகளின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு அங்கு மேலும் பல உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் இதுதொடர்பில் உள்ளுராட்சி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10739

பெருளாதார வளர்ச்சிக்கு தொழிநுட்ப உள்ளீடுகள் அவசியம் – மத்திய வங்கி ஆளுனர்

indrajith

இலங்கையின் பெருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு தொழிநுட்ப அடிப்படையிலான உள்ளீடுகள் அவசியம் என மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். உலக வங்கியின் வருடாந்த சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை மத்தியதர வருமானம் பெறுகின்ற நாடு என்ற அடிப்படையில் அதன் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட வேண்டும். நவீன தொழிநுட்பங்களை ஈர்ப்பதன் ஊடாக இது சாத்தியமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10736

வடக்கு – கிழக்கு தொடர்பில் எமது நோக்கம் இதுவே ; கருணா அம்மான்

வட,கிழக்கு இணைந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் என கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் மதுரோயா திட்டம் என்னும் பெயரில் கீழ் பாரிய நில அபகரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ மாகாணசபை உறுப்பினர்களுக்கோ எதுவும் தெரியாது எனவும் அவர்கள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10734

நாமல் இன்று நீதிமன்றில் முன்னிலை

உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை செய்யப்படவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான டி வி ஷானக, பிரசன்ன ரணவீர, மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிகார, சம்பத் அதுகோரள மற்றும் தாய்நாட்டுக்கான இராணுவ அமைப்பின் இணைப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 10ஆம் திகதி, வாக்கு மூலம் வழங்க, ஹம்பாந்தோட்டை காவல்துறை தலைமையகத்திற்கு சென்ற வேளையில் கைது செய்யப்பட்டனர். மத்தல வானூர்தி நிலையத்தை நீண்டகாலம் குத்தகை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10732

அரசியல் கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரிசயல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று பேரில் இருவருக்கு சிறைச்சாலை வைத்தியர்களால் சேலைன் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். மூன்று அரசியல் கைதிகள் தொடர்பிலும் வைத்தியர்கள் தொடர் கண்காணிப்பிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 2012 ஆம் ஆண்டில் வெவ்வேறு காலப்பகுதியில் வவுனியாவில் கைது செய்யப்பட்ட மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுறை திருவருள் ஆகியோரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10729

மைத்திரியின் நிகழ்வை புறக்கணித்தது கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி கலந்துகொள்ளும் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனை புறக்கணித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா இன்று யாழ். இந்துக் கல்லூரியல் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. குறித்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளதுடன் சிறப்பாக நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10727

”நாங்கள் தேவையற்ற சண்டைகளில் ஈடுபடவேண்டிய அவசியமே இல்லை” லக்ஸ்மன் கிரிகெல்ல

இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். கௌதம புத்தரும் இந்தியாவில் இருந்துதான் வந்தார். இலங்கையின் இறுதி அரசன் கூட ஒரு தமிழ்மகன், இதுதான் வரலாறு நாங்கள் தேவையற்ற சண்டைகளில் ஈடுபடவேண்டிய அவசியமே இல்லை என பாராளுமன்ற முதல்வரும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரிகெல்ல தெரிவித்தார். மட்டக்களப்பு மண்டூர் குறுமண்வெளி பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10725

விவசாயத்தினை மேம்படுத்த நடவடிக்கை : யாழில் மைத்திரி

கடந்த பல தசாப்தங்களை பார்க்கும் போது மிக நேர்த்தியான விவசாயம். யாழ்ப்பாணத்தில் விவசாயம் என சொல்வது பல வித எதிர்பார்ப்புக்களும் பாராது யாழ்ப்பாணத்து விவசாயிகள் உள்ளனர். கமத்தொழிலை முன்னேற்றுவதற்கு கமத்தொழில் திணைக்களத்தின் ஊடாக பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். விதை நெல் பெற்றுக்கொடுக்கப்பட்டது. விவசாயத்துறையினை மேம்படுத்த இன்னும்பல உதவிகளை மேற்கொள்ளவுள்ளோம். விதை நெல் பெற்றுக்கொடுக்கப்பட்டது. விவசாயதுறையினை மேம்படுத்த இன்னும்பல உதவிகளை மேற்கொள்ளவுள்ளோம். காலை விவசாயிகளை சந்தித்த போது பல விதமான வேண்டுகோள்களை முன்வைத்தார்கள். வெளிநாட்டில் இருந்து உருளைக்கிழங்கினை இறக்குமதி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10723

“விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை” – பொன்சேகா

சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து கூறும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10721

மொழி மதம் என்பன ஒரு தடையாக இருக்க கூடாது – மைத்திரி !

நாட்டில் வடக்கு தெற்கு என்ற எந்தப் பிரச்சினையும் எமக்கில்லை. வடக்கில் உள்ள மக்களில் நூற்றுக்கு என்பது வீதமான மக்கள் என்னை ஜனாதிபதியாக்க வாக்களித்தீர்கள். அதை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன் என் மீது நம்பிக்கை வைத்தே நீங்கள் எனக்கு வாக்களித்தீர்கள் நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்காகதான் எனக்கு வாக்களித்தீர்கள் கஸ்ரம், பயம், மீண்டும் யுத்தம் இடம்பெறாமல் இருப்பதற்கே எனக்கு வாக்களித்தீர்கள் நானும் பிரதமரும் எங்களுடைய அரசாங்கமும் மீண்டும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே செயற்பாடுகளை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10719

எல்லை நிர்ணயம் குறித்து மலையக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை : பைசர் முஸ்தபா

நுவரேலியா, அம்பகமுவ பிரதேச சபைகளை 5 அலகுகளாக பிரிப்பது குறித்து மலையக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மாநகர, நகர, பிரதேச சபைகள் தேர்தல் திருத்த சட்டமூலம் செவ்வாய்க்கிழமை வர்த்தமானி அறிவித்தலுக்கு விடப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநகர, நகர, பிரதேச சபைகள் தேர்தல் திருத்த சட்டமூல பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இன்று கையளித்த மாகாணசபை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10717

திருத்த சட்டமூலம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த சட்டமூலம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலத்திற்கு நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10715

போதைப் பொருள் பாவனையில் இருந்து சமுதாயத்தை மீட்போம்

drugs

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையில் இருந்து சமுதாயத்தை மீட்போம், சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுப்போம் எனும் தொனிப் பொருளில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இதனடிப்படையில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் தலைமையிலும், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.சில்மியா தலைமையிலும் இன்று நடைபெற்றது. இதன்போது அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களிடத்தில் விழிப்புணர்வும், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் செயலக ஊழியர்கள், பொது அமைப்புக்கள், …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10712

பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸின் வேஷம் கலைகிறதா? திடுக்கிடும் புதிய தகவல் வெளியீடு

சர்ச்சைக்குரிய ‘பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிணைமுறி விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று சாட்சியமளித்த மேற்படி நிறுவனத்தின் தலைமை விநியோகஸ்தரான நுவன் சல்காது என்பவர், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைப் பெறுவதற்காக பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லஞ்சம் கொடுத்தமைக்கான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அதில், ஊழியர் நல நிதியம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10710

மட்டக்களப்பில் போதைப் பாவனையை குறைக்க நடவடிக்கை எடுங்கள் – அமீர் அலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்தை போதைக்காக செலவழிப்பது அதிகமாக காணப்படுகின்றது. இதனை தடுக்கும் முயற்சியில் தாய்மார்கள் செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10707

“தனியார் துறையை ஊக்குவிக்கும் 2018 பட்ஜெட்”: நிதியமைச்சர் மங்கள சமரவீர

“2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தனியார் துறையை ஊக்குவிப்பதாகவே அமையும்” என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வொஷிங்டனில், உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் தெற்காசிய இயக்குனர் மெங்கிஸ்டு அலெமாயெஹுவுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “2018க்கான வரவு-செலவுத் திட்டம் மூலம் நாட்டில் புதிய பொருளாதாரப் பாய்ச்சல்கள் உண்டாகும். குறிப்பாக, புத்தாக்கத்துடனான தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். தனியார் துறை மீது ஒருமித்த கவனம் செலுத்தப்படும். இதன்மூலம், புதிய பொருளாதாரக் கட்டமைப்புகள் உருவாகும்” என்று அமைச்சர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10705

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்

மக்களின் தேவைகள் யாவும் எமக்கு தரும் பட்சத்தில் உரியமுறையில் நிறைவேற்றப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறை சின்னமடுப் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – இன்றுள்ள சூழ்நிலையில் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஏமாற்றமளித்துள்ள நிலையில் அவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். குறிப்பாக தேர்தல் காலங்களில் தமது வெற்றியை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10703

அமைச்சரவையில் குழப்பநிலை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் தொடர்பில் நேற்று அமைச்சரவையில் கடுமையான கருத்துமோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு இடையில் இந்த கருத்துமோதல் இடம்பெற்றுள்ளது. குறித்த நெடுஞ்சாலையின் பொத்துஹெரவில் இருந்து கண்டி வரையிலான பாதை நிர்மாணத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெறுவதாக அமைச்சர் தயாசிறி குற்றம் சுமத்தினார். இதனை அடுத்து இடம்பெற்ற கடுமையான கருத்து மோதல்களில் ஏனைய அமைச்சர்களும் தலையிட்டனர். இந்த நிலையில் குறித்த பாதை தொடர்பில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10701

அவசர விபத்து முதலுதவி சேவைக்கு ஹெலிகொப்டர் பயன்பாடு விரைவில்.!

அவசர விபத்துக்களின் போது விபத்துக்குட்பட்டவருக்கு சிகிச்சையளிக்கவென எதிர்காலத்தில் அம்பியூலன்ஸ் சேவையுடன் அதிநவீன மற்றும் சகல வைத்திய வசதிகளுடன் ஹெலிகொப்டர் சேவையும் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முதலுதவி சேவைக்கான உபகரணங்களை பாடசாலைகள் மற்றும் பிராந்திய வைத்திய நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு தொற்றா நோய் தடுப்பு பிரிவினால் இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதன்போது சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர் பைசல் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10699

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்களுக்கு உதவ அவுஸ்ரேலியா முன்வரவேண்டும் : விஜயகலா கோரிக்கை

vijeyakala

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பல்வேறு வகைகளிலும் உதவுவதற்கு அவுஸ்ரேலியா முன்வரவேண்டும் என்று அவுஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினரும் சனத்தொகைக்கும் அபிவிருத்திக்குமான ஆசியப் நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் உபதலைவருமான அன் சுட்மலிஸிடம் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். சனத்தொகைக்கும் அபிவிருத்திக்குமான ஆசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் 12 ஆவது மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10696

தேசிய மர நடுகைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்…!

நீர் வள பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வன ரோபா தேசிய மர நடுகை தேசிய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி, தெல்தொட்ட கந்தேதன்ன குளத்திற்கருகே நடைபெறவுள்ளது. இயற்கையை பாதுகாக்கும் எண்ணக்கருவின்படி ஜனாதிபதி அலுவலகமும் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் ‘புனருதய’ சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமான நீர்வள பிரதேசத்தை பாதுகாத்தல் மற்றும் வனப்பிரதேசத்தை அதிகரித்தல் என்பவற்றை நோக்கமாகக் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10694

வித்தியா கொலை வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு

சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும், குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஏழு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பதிவுத்தபாலில் மேன்முறையீட்டு மனுவை அனுப்பி வைத்துள்ளார். இதேவேளை, மாணவி படுகொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் மற்றும் அவரது …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10692

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.