செய்திகள்

தமிழர்களுக்கான தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இனவாதிகள் இடமளிப்பார்களா? – மாவை

புதிய அரசியலமைப்பு மிக விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அண்மைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்புகிறோம் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஆனாலும் பயனுள்ள தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இனவாதிகள் இடமளிப்பார்களா? என சந்தேகிப்பதாகவும் கூறினார். புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்; புதிய அரசியலமைப்புக்கான …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12079

மகிந்தவை மீண்டும் கொண்டுவந்து தமக்கே உலை வைக்கும் ஊடகங்கள் : ரணில் எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா ,ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர, ஊடகங்களும் ஊடகவியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அடுத்த தேர்தலில் ராஜபக்ஷ வெற்றிபெற்றால், ஆதரவளித்த ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வர்” பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இன்று (வெள்ளிக்கிழமை) கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர், இராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12077

” சட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்”

ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச பிரிவுக்குட்பட்ட பெரியகளப்பை போலி ஆவணங்களை தயாரித்து அத்துமீறி நில அபகரிப்பு இடம் பெறுகின்றது. இது தொடர்பாக சம்பந்தபட்ட அரச அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என இந்து சம்மேளனத்தின் தலைவர் அருன்காந்த் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பெரியகளப்பை அண்டிய பகுதியைச் சேர்ந்த 4 ஆயிரம் குடும்பங்கள் ஜீவனோபயமாக நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12074

ஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு

olringe

இலங்கை ஒலிம்பிக் வீரர்களது சங்கம் (ஸ்ரீ லங்கா ஒலிம்பியன்ஸ் ) அடுத்த மாதம் 22 ஆம் திகதி கண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள ஒலிம்பிக் தின கொண்டாத்திற்கு தேசிய ஒலிம்பிக் குழு எதிர்புத் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. சர்வதேச ஒலிம்பிக் இலட்சினை மற்றும் அடையாளத்தை இலங்கை சார்பில் பயன்படுத்த தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு மாத்திரமே முடியும். இதனை தேசிய ஒலிம்பிக் குழுவைத் தவிர வேறு எந்த அமைப்புக்களும் தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் அனுமதியின்றி இலங்கையில் பயன்படுத்த முடியாது என தேசிய …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12071

கைத்தொழில் வலயம் என்ற பெயரில் சீனா இராணுவத் தளம்?

அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனத் தூதுவர் செங் ஷியுவான் நிராகரித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக பெருமளவில் ஊகங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் உண்மையில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்ளூர் அதிகாரிகளினாலேயே கையாளப்படும் என்று உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12069

போலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்!

மட்டக்களப்பு, வாகரை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட போலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் இணைத் தலைமையில் இடம்பெற்ற வாகரை வடக்கு பிரதேச அபிவித்திக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஒருவரால் இராஜாங்க அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்பட்டு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12066

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகினார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எச்.எம்.நவவி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா நாடாளுமன்ற செயலர் தம்மிக திசநாயக்கவிடம் கையளித்துள்ளார். றிசாத் பதியுதீன் தலைமையிலான சிறிலங்கா மக்கள் காங்கிரசின் சார்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் நவவி, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். உள்கட்சி முரண்பாடுகளை அடுத்தே இவர் பதவி விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12064

இலங்கைக்கு உதவ அவுஸ்திரேலிய அரசாங்கமும் யுனிசெவ் மற்றும் உலகஉணவு திட்டமும் ஒப்பந்தம்

unicef-025.730x0

இலங்கையின் இயற்கை அனர்த்த தயார் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவ அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் முன்வந்துள்ளன. இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளும் விடயத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமும் யுனிசெவ் மற்றும் உலகஉணவு திட்டமும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஐ.நா. அமைப்புகளும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையின் திறனை வலுப்படுத்துவதற்கான மூன்று வருட திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளன. இந்த திட்டத்திற்கு 750,000 அவுஸ்திரேலிய டொலர்களை செலவிடுவதற்கு அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் இணங்கியுள்ளன. 2004 ஆண்டு சுனாமி இலங்கையை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12061

கோத்தபாயவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க அரசு.

ஸ்ரீலங்கா, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கையை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையில் இருந்து விலகிக் கொள்ளும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார். அமெரிக்கக் குடியேற்ற மற்றும் தேசிய சட்டத்தின் கீழ் உள்ள சில சிறப்பு விதிகளின் கீழ் கோத்தபாயவின் குடியுரிமையை நீக்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது என்று கூறப்படுகின்றது. இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்புத் திருத்தச் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12059

தமிழர்களை பகடைக்காயாக வைத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் இலங்கை – தருமலிங்கம் சுரேஸ்

TNPF-LOGO

இந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நேற்று மாலை கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பில் கட்சியின் மட்டு அமைப்பாளர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, தமிழர்களுடைய நலன்கருதி இந்தியா செயற்படவில்லை அதேவேளை தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை நிலைநிறுத்தி வல்லரசு என சீனாவுடன் போட்டியிடுவதற்காகவும் தங்களுடைய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்குமாக தமிழர்களை பகடைக்காயாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12056

முல்லைப் பெண்களை முன்னேற்றப் போகும் பா.உ.சாந்தி சிறிஸ்கந்தராஜா !

shanthi-sriskantharajah-e1517673471255

முல்லைத்தீவு மாவட்ட பெண்களை வாழ்வாதாரத்திலும் சிறிஸ்கந்தராஜா பொருளாதாரத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, முல்லைத்தீவு மாவட்டமானது யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களே அதிகளவாக காணப்படுகின்றது. இவ்வாறான குடும்பங்களுக்கு துறைசார்ந்த அமைச்சுக்கள், திணைக்களங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என்பவற்றினூடாக கிடைக்கப் பெறுகின்ற உதவிகளைக் கொண்டு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12053

உங்களால் ஆட்சி செய்ய முடியாது: அரசாங்கத்தை கேலி செய்யும் மகிந்தவின் வலதுகரம் பீரிஸ்!

G.L.Peiris

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும்இ இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12050

பஸ் கட்டணம் 12.5 வீதத்தால் அதிகரிப்பு

yimg_2P3gKo

பஸ் கட்டணங்களை 12.5 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதி சிறிசேன தலைமையில் இன்று கூடிய அமைச்சரவை கூடத்தில் யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12047

தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லையா?, அரசாங்கம் வாக்குறுதிகளை மறந்துவிட்டனவா?

jail

தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமையானது தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்முன் கூறிய வாக்குறுதிகளை மறந்துள்ளமையினை எடுத்துக் காட்டுகின்றது என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அவ் அமைப்பினர் மேலும் தெரிவித்திருப்பதாவது,, தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது அரசியல் கைதிகள் விடயத்திற்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குறுதிகள் வழங்கியது . ஆனால் இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கம் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12044

ரணிலை வீழ்த்துவதற்கு கூறிய பொய் எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது -கோத்தபாய

gotabaya-rajapaksa

என்னால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது மங்கள சமரவீரவுக்கும், என்னை விமர்சிக்கும் நபர்களுக்கும் நன்றாக தெரியும். அவ்வாறு தெரிந்தே எனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை முன்வைக்கின்றனர். அன்று ரணிலை வீழ்த்த பொய்களை கூறியவர்கள் இன்று என்னை வீழ்த்தவும் அதே பொய்களை கூறுகின்றனர். ஆனால் நான் சாதித்துகாட்டுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் ஒருபோதும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் போராடவில்லை. பயங்கரவாதிகளுடன் மட்டுமே போராடினோம் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12041

விக்கியின் செயற்பாட்டினால் தென்னிலங்கையில் குழப்பம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை படையினர் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் தவாறான எண்ணப்பாடுகளையும் விதைத்திருக்கின்றது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இராணுவம் அகற்றப்படவேண்டும் என்பதே விக்கினேஸ்வரனின் பிரச்னையாக உள்ளது. முதலமைச்சர் ஆழ¬மாக சிந்திக்கவேண்டும் இல்லாவிடின் மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கு நாம் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12038

அம்பாந்தோட்டையில் செயற்கைத் தீவு! உரிமை கோருகிறது சீனா

அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் கடன் நெருக்கடியைப் பயன்படுத்தி, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சிறிலங்கா பெற்றுள்ளது. இந்தநிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வெளியே அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா இப்போது உரிமை கோரி வருகிறது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக நிலப்பரப்பில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, துறைமுகத்துக்கு வெளியே செயற்கைத் தீவு ஒன்று அமைக்கப்பட்டது. 50 மில்லியன் டொலர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12035

எமது மக்கள் தற்செயலாக சாகவில்லை; கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் – விக்கினேஸ்வரன்

CV-Vigneshwaran-yaalaruvi

உரிமைகளைக் கேட்பது இக்கட்டான நிலையை ஏற்படுத்துமானால் நாம் மௌனம் சாதிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நாம் வாளாதிருந்தால் நாடு பூராகவும் சிங்கள பௌத்த மயமாக்கப்படும். பிழைகளை சிங்களத் தலைவர்கள் தம்வசம் வைத்துக்கொண்டு தமிழர்களை பிழை கூறுவது பொருத்தமானதன்று என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது உரித்துக்களைப் பெறும் வரையில் நாம் போராடாவிட்டால் நாம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும். தமிழரை விரட்டியடிக்க வேண்டும் அவர்களின் அதிகாரங்களை குறைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்ட சிங்கள …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12031

உலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப்படை புலிகளிடம் இருந்தது! – மகிந்த

mahinda001-720x450

உலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தில் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட இராணுவத்தினரும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும் அதனை ஏற்றுக் கொண்டு அறிக்கைகளை வெளியிடுவது மிகவும் மோசமான …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12028

பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும்

missing-person-MGN

பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்கள் அனைவர்களினதும் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்து இன்று ஒன்பது வருடங்களாகின்ற நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் விபரங்களை அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கவேண்டும் என மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. யூன் 2017 ம் ஆண்டு காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்தித்தவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12025

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று

2009 ம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாள்வரை கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெறுகிறது. அந்தவகையில் இன்றைய தினம் 11 மணிக்கு முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. தமிழர்களில் உரிமைகளை கோரும் தமிழ் மக்களது ஒற்றுமையை வெளிக்கொண்டுவரும் முகமாக யாழ் பல்கலை மாணவர்களில் அயராத முயற்ச்சியின் பயனாக இன்று அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து இந்த நினைவு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12023

நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மஹிந்தவின் ஆட்சியே காரணம் – பிரதமர்

நாட்டில் தற்‍போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து எதிரணியினர் எம்மை விமர்சிக்கின்றனர். நாட்டில் தற்போதுள்ள நிலைக்கு நாம் காரணமல்ல முன்னாள் ஆட்சியாளர்களே காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவத்தார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினால் அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் பலமாகியுள்ளது. இதன் காரணமாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. ஏனைய நாணயங்களின் பெறுமதி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12021

மக்களின் உணர்வுகளில் கலந்த முள்ளிவாய்க்கால் மண்!

IMG_1477

தமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது முள்ளிவாய்காலில் படுகொயை செய்யப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பொதுச் சுடரினைக் கொடுக்க படுகொலை செய்யப்பட்ட 150,000 மக்களுக்கான பொதுச் சுடர் ஏற்பட்டது.. குறித்த நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழர் தாயகப் பகுதியில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12018

மே 18, தேசிய வெற்றி தினம் என்கிறது ஜாதிக ஹெல உறுமய

நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள ஜனநாயக சூழலை பயன்படுத்தி வடக்கில் மீண்டும் ஈழ வாதக் கொள்கை பலமடைந்துவருகின்றது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது எதிர்வரும் மே 18ஆம் திகதி வடக்கில் இடம்பெறும் நினைவு தினங்கள் குறித்து ஜாதிக ஹெல உறுமயவின் இணைச் செயலாளர் மற்றும் ஊடகப்பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க விடுத்துள்ள விசேட அறிவித்தலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் அவர் தெரிவிக்கையில், தெற்கில் இடம்பெறும் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12016

காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை!

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்கள் தமது உறவுகளை கைது செய்து பின்னர் காணாமல் ஆக்க செய்தனர் என்றும் தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் கோரி யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம் மனு மீதான விசாரணையானது நேற்றைய …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12014

Older posts «

» Newer posts

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.