கட்டுரைகள்

ஆவா குழு உருவாக்கமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புத்துயிரும்.

அயோக்கியத்தனமான அரசியல் தமிழர் மீது மீண்டும் பாச்சப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகள் மீதான தடையை நீக்குவதாக அறிவித்தது. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாம்ராஜ்யம் புலிகள் தடை தொடரும் என அறிவித்தது. இதன் பின்னணியில் தான் ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் ஆவா குறுப் புத்துயிராக்கமும் பயங்கரவாத தடைச்சட்ட மும் மிக அழகாக இராணுவ புலனாய்வு நிகழ்ச்சி நிரல்களுடன் கருக்கட்டியுள்ளது. ஆவா குழுவுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கும் ஏன் முடிச்சு போடப்பட்டது? ஆவா குழுவுக்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10373

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்கள் மீதான புலனாய்வுப் பார்வை

knive

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் குழுக்கள் தோன்றுகின்றது. புதியபுதிய குழுக்கள் உடுவாக்கப்படுகின்றது. தேவைகள் ஏற்படுகின்ற போது எல்லா வாள்வெட்டு குழுக்கள் உருவாக்கப்படுகின்றது. அதற்கு ஆவா குறூப் என்னும் பெயர் சூட்டப்பட்டிருகிறது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10216

இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன்! மறைக்கப்பட்ட வரலாறு

எல்லாளன்

அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளன். இலங்கை வரலாற்று ஆவணமான மகாவம்சம் இந்த தகவலை பதிவுசெய்துள்ளது. இவர் ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகவும் மகாவம்சம் குறிப்பிடுகின்றது. மேலும் எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்தவர் என்றும், இவர் “பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்” சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9669

ரணிலின் ஒப்பரேசன் II

ரணில் விக்கிரமசிங்க சிறீலங்காவின் பிரதமராக நான்காவது தடவையாக பதவியேற்று எதிர்வரும் சனவரி 8 திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைகிறது. டிசம்பர் 2001ல் ரணில் மூன்றாவது தடவையாக பதவியேற்ற பின், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதற்காக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மிக நுட்பமான முறைகளில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். சர்வதேச பாதுகாப்பு வலை திட்டத்தின் ஊடாக புலிகளை உலகளாவிய ரீதியில் பலவீனப்படுத்திய ரணில், கருணா என அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் தனது வலையில் சிக்கவைத்ததனூடாக புலிகளை உள்நாட்டில் பலவீனப்படுத்தினார். விடுதலைப் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7315

சம்பந்தனின் கணக்கு தப்புமா…..?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச அளவில் அதிகரித்து வரும் செல்வாக்கு தமிழர்களுக்குச் சாதகமாக அமையும் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன். மட்டக்களப்பில் கூட்டமைப்பின் பிரமுகர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். “மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரையில் சரியானதை செய்ய விரும்புகிறார். சரியானதை செய்யும்போதே இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும், சமாதானம் ஏற்படும், நாடு முன்னேறும் என அவர் நினைக்கின்றார். அவ்வாறான நிலைப்பாடுகள் காரணமாக அனைத்துலக மட்டத்தில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7308

புலிகளின் அழிவும் இந்தியாவும்!

எரிக் சொல்ஹெய்ம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படும் என்பதை இந்தியா கடைசி சில மாதங்களில் தான் உணர்ந்து கொண்டதாக அண்மையில் இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார், நோர்வேயின் முன்னாள் இலங்கைக்கான சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதை இந்தியா விரும்பியது என்றும், அவர்கள் அழிக்கப்படப் போகிறார்கள் என்பதை கடைசி மாதங்களில் இந்தியா உணர்ந்து கொண்ட போதிலும், அவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூட இந்தியா விடவில்லை என்றும் எரிக் சொல்ஹெய்ம் இந்தப் பேட்டியில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7005

வித்தியாசமானதொரு அரசியல் போக்கை இலங்கையர்கள் காண இருக்கின்றார்கள்.

இது உண்மை, இது தான் நிதர்சனம், இதுவே யதார்த்தம். இலங்கை நாட்டில் வித்தியாசமானதொரு அரசியல் போக்கை இலங்கையர்கள் காண இருக்கின்றார்கள். ஆம்! இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பை இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையாக விசாரிக்கவுள்ளது. 2009ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இலங்கையில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றியே இவ்விசாரணை அமையவிருக்கின்றது. இது தொடர்பாகவே இலங்கை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளில் இருந்து அதிகம் பேசப்படுகின்றது. அமெரிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருந்த ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் அதற்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6697

விடியலைத் தேடும் தமிழினம்

பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனின் உரை, இலங்கை அரசாங்கத்தின் முழுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை என கூட்டத்தொடரின் ஆரம்ப நாளே அமர்க்களமாக அமைந்திருந்தது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையில் இங்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, நடைபெறவுள்ள பல விடயங்களைச் சுட்டிக்காட்டி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6679

ஜனநாயக போராளிகளின் அரசியல் பிரவேசமும் தமிழ் தேசிய வாதிகளின் தேசிய வியாபாரமும்

தமிழ் தேசியமும், தமிழர் ஆயுத விடுதலைப் போராட்டமும் தேர்தல் களத்தில் ஒரு பண்டமாக்கப்பட்டு தேசியத்தையும் போராட்டத்தையும் வியாபாரப் பொருளாக்கி வடக்கின் தமிழ் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயகப் போராளிகள் என்றழைக்கப்படும் சில போட்டியாளர்கள் தேர்தல் களத்தில் குதித்திருப்பது தமிழ் மக்கள் மத்தியில் தளத்திலும், புலத்திலும் கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழர்கள் மத்தியில் ஒரு தரப்புக்கு குழப்பத்தையும், அச்சத்தையும் பயத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இன்னொரு தரப்புக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் தேசியவாதிகளாக தம்மை அடையாளப்படுத்தும் தரப்புக்கு அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6250

மகிந்த ராஜபக்சவின் மறுநுழைவை அமெரிக்காவும், இந்தியாவும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?

ஏழு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறார். கடந்த முதலாம் திகதி மெதமுலானவில் வைத்து அவர் பாராளுமன்ற அரசியலுக்கு மீண்டும் திரும்பப் போவதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவு சிலருக்கு சந்தோசத்தையும் இன்னும் சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் மீள்வருகை சிறுபான்மையின மக்களுக்கு நல்லதொரு சகுனமாகவோ, செய்தியாகவோ இருக்கப் போவதில்லை. அதுபோலவே மேற்குலக நாடுகளாலும், இது நல்லதொரு அறிகுறியாகப் பார்க்கப்படும் என்று …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5936

இலங்கையுடன் அமெரிக்கா இருக்கிறது.

பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது. அது 26 பேர் பயணம் செய்யக் கூடிய அமெரிக்க கடற்படையின் சி-2 ரக போக்குவரத்து விமானம். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5403

தமிழர் தரப்பு சரியாக சிந்தித்து செயலாற்றுங்கள்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று. இப்போது அதே பழமொழி இலங்கை அரசியலுக்கு நன்றாக பொருந்துகின்றது. ஆம் இலங்கை அரசியல் தற்பொழுது எப்படி நகர்ந்து கொண்டிருக்கின்றது? யார் அரசாங்கம்? யார் எதிர்க்கட்சி? என்று சாதாரண பாமர குடிமகனிடம் கேட்டால் விழிபிதுங்கி நிற்பான். இதுவே இன்றைய நிலை. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5369

இப்போது நடக்கும் அரசியல் ராஜபக்சாக்கள் எதிர் அமெரிக்க, இந்தியா. ஆடுகளத்தில் வெற்றி யாருக்கு?

உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது. இந்த நாட்டில் இன்னார் தான் ஆட்சியில் இருக்க வேண்டும், எம்மை பகைப்பவர்கள், எவராக இருந்தாலும் அவர் எந்த பலத்தைப் பெற்றிருந்தாலும் அவரின் செல்வாக்கை சரித்து தன் கொள்ளைக்கு அல்லது தனக்கு ஏற்றவனாய் ஒருத்தனை பதவியில் அமர்த்தும் சிந்தினையில் உள்ளவன் அமெரிக்க ஜனாதிபதி. இதன் தாக்கத்தினை எகிப்திலும், லிபியாவிலும் காண முடிந்தது. இதன் அடுத்த அங்கமே இலங்கையில் ராஜபக்சாக்களை ஓரம் கட்டுதல். வீழ்த்துதல் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5327

பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை மீண்டும் அழிவை நோக்கி இட்டுச் செல்லும், கஜேந்திரகுமாரின் கருத்துக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறிய கருத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும், ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரசினதும் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ‘அகில இலங்கை’ இரத்தைத்தைச் சூடேற்றியுள்ளது. அப்படியென்ன சம்பந்தன் கூறியுள்ளார்? அதனைக் கஜேந்திரகுமாரே கூறுகிறார்: “ஒரு நாடு இரண்டு தேசங்கள் எனக் கூறி வருகின்றார்கள் இவர்கள் குறிப்பிடுவது தமிழர் பகுதி ஒரு தேசம் சிங்களப் பகுதி ஒரு தேசம் இந்த இரண்டு தேசங்களும் இணைந்துதான் ஒரு நாடு எனக் கூறுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார். …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5140

புலி எதிர்ப்புக் கும்பல்களின் நச்சு அரசியலின் கீழ் : வியாசன்

மைத்திரிபாலவும் பரிவரங்களும் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்ட பின்பு ஜனநாயகத்தை மீட்கிறோம் உரிமை வழங்கிறோம் என ஆங்காங்கே மக்களைக் கூப்பிட்டுக் காட்சிப்படுத்தி வருகின்ற சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க அதன் அடியில் நச்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்த காலத்தில் அரச பாசிசத்தின் தொங்கு தசைகளாக ஒட்டிக்கொண்டிருந்த தமிழ்ப் புலியெதிர்ப்புக் கும்பல்கள் மைத்திரிபால அரசால் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. புலி எதிர்ப்பு கூட்டங்களை இணைத்துக்கொண்டால் தமது மனித உரிமைக் காட்சிப்படுத்தலுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மட்டுமே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இதனால் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5061

மறந்துவிட்டு அல்லது ஏற்றுக் கொண்டு பயணிப்பதா?

அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் தமிழர்களின் நிர்வாகத்துறையும், நீதிமன்றங்களும், பாதுகாப்புப் பிரிவுகளும் இருந்த காலகட்டம் என்று ஒன்றுண்டு. அதனை நாம் பிரகடனப்படுத்தப்படாத அரசு என்று அழைத்தோம். அப்படியிருந்த அந்தக் காலங்களில் தமிழர் தரப்பு உலகநாடுகளின் இராஜதந்திரிகளோடு தமிழர் தீர்வுக்காகப் பேசிய வண்ணமே இருந்தார்கள். அவர்கள் தங்களால் முடிந்தளவு இராஜதந்திர நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தார்கள். ஆயுதப் போராட்டம் மிக உச்சநிலையில் இருந்த காலத்திலேயே இவை நிகழ்ந்தன. இறுக்கமான உலக நிலைப்பாடுகளும், செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5001

நேர்மை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நான் ஜனாதிபதியாக ஆகியிருக்கமாட்டேன். – ஜனாதிபதி மைத்திரி

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்குத் கொண்டுவருவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 400 மருந்துக் கம்பனிகளிடமிருந்து தலா 25 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் சட்ட வரைஞர் திணைக்களத்தின் பிரதானியை ஓய்வுக்குள்ளாக்கியதுடன் சட்டவரைபும் அது ஒழுங்கமைக்கப்பட்ட கணினியும் கூட காணாமல்போகச் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஊழல் மோசடிகள் தொடர்பில் அமைச்சர்கள் வாய்திறக்க வேண்டாம் என்றும் கணக்காய்வாளர் நாயகம் பார்த்துக்கொள்வார் என்றும் மஹிந்த …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4963

கொல்லச் சொன்னது கோத்தா! சாட்சியமளிக்க தயார்!

கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்ட தனிநபரின் பாவத்திற்காக, அவரை காப்பாற்றுவதற்காக படையினரும் முழுநாடும் பலியாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4924

ரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா?

தமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் நீரூபித்துள்ளார். ஏற்கெனவே முயற்சிக்காததால் தான் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழந்தவர் இவர். இப்போது வடமாகாண தமிழ் மக்களின் சுயகௌரவத்துக்கு சவால் விட நினைத்து மூக்குடைபடப் போகிறார். இவரை நம்பி போட்டியிடப்போகும் விஜயகலா மகேஸ்வரனின் நிலைமை தான் பரிதாபகரமானது. ஏற்கனவே இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்து மூக்குடைபட்ட நிலையில் இருக்கிறார். இந்தியாவில் ஒரு மரபு உள்ளது. பதவியிலிருக்கும் பிரதமர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4909

நன்றாக தெரிந்து கொள்வோம் புற்றுநோயின் தாக்கங்களையும் தன்மைகளையும்!

இந்த வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் மனசுக்குள் பயப்பூச்சி பறந்து உடல் சிலிர்ப்பது உண்மை. உடலில் சிறிய கட்டி தோன்றிவிட்டாலே ‘அது புற்றுநோயாக இருக்குமோ’ என்ற அச்சப் போர்வையுடன் மருத்துவரிடம் வருபவர்கள் அநேகம் பேர். இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘எபோலா’வோடு ஒப்பிடும்போது புற்றுநோய் ஒரு பயங்கர நோயே அல்ல. இதை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால், இது ஓர் உயிர்க்கொல்லி நோயுமல்ல! read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4858

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாற்றம் நிகழுமா? அரசியல் அகழுமா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சிமாற்றத்தின் தாக்கம் கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் விட்டுவைக்கவில்லை நிர்வாக மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென ஒரு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுவரும் அதேவேளை மறுபுறம் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தேவை நிர்வாக மாற்றமல்ல நிர்வாகங்களை ஆக்கிரமிக்கும் அரசியல் தலைமைகளையும், குழுக்களையும் இல்லாமல் செய்வதே என்கின்றனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4605

இலங்கையும் அங்கவீனமும் – யுத்தத்தால் அவயவங்களை இழந்தோரின் நிலை என்ன?

‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே’ என்ற நம்பிக்கை தரும் பாடல்வரிகளை ஒரு முறையேனும் முணுமுணுக்காதவர்கள் நம்மில் வெகுசிலராகவே இருக்கக்கூடும் . read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4503

வறுமையில் முதலிடத்தில் உள்ள மாவட்டத்தில் இருந்து ஒரு குரல்- உணவை பாதுகாப்போம்!-நிலா

இன்று உலக உணவு தினம் இந்த நேரத்தில் கூட உலகில் உள்ள எத்தனையோ கோடிக்கணக்கான உயிர்கள் உணவு இன்றி உயிர் பிரிந்திருக்க கூடும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4243

கிழக்கை நோக்கி பாயுமா கூட்டமைப்பு?

இலங்கையில் தேர்தல் திருவிழா ஒன்றினை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருவதுடன் அதற்கான முன்ஆயத்தங்களையும் மேற்கொண்டுவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4218

அமொிக்காவில் தமிழ் படிக்கும் அமொிக்கா்கள்,பனை நிலம் தமிழ்ச் சங்கத்தின் முயற்சி!

unnamed-9-580x384

சார்ல்ஸ்டன்(யு.எஸ்): தமிழ் மொழியை அமெரிக்கர்களுக்கும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் சார்ல்ஸ்டன் பனை நிலம் தமிழ்ச் சங்கத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3838

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.