தாயகச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு DNA பரிசோதனை தேவை –சிறிநேசன் எம்.பி.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு DNA பரிசோதனைகள் செய்யவேண்டிய தேவையிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். புதிய அரசியல் யாப்பினை குழப்பும் வகையில் செயற்படும் மகிந்தராஜபக்ஸவுடன் எந்த வகையிலும் கைகோர்த்து செயற்படமுடியாது எனவும் அவர் தெரிவித்தார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12183

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்

மக்களின் தேவைகள் யாவும் எமக்கு தரும் பட்சத்தில் உரியமுறையில் நிறைவேற்றப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறை சின்னமடுப் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் – இன்றுள்ள சூழ்நிலையில் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஏமாற்றமளித்துள்ள நிலையில் அவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். குறிப்பாக தேர்தல் காலங்களில் தமது வெற்றியை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10703

பல பிரதேசங்கள் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விட்டன

காலியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒல்லாந்தர்களால் பொறிக்கப்பட்டதல்ல அது ஒரு சீன மாலுமியால் பொறிக்கப்பட்டது என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். காலி கல்வெட்டு தொடர்பில் தவறான விடயம் பதியப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் பொதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், காலியில் ஒல்லாந்தர்களால் சீன, பாராசீகம், தமிழ் போன்ற மொழிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10657

வவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்!

vanni

வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினாலும், சில வடக்கு மாகாணசபை உறுப்பினர்களாலும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை எதிர்த்து, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாகப் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அதற்கு ஆதரவாக இந்த சுவரொட்டிகள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9779

முடிவு சம்பந்தனிடம்!! அவசரமாக வடக்கு விரைகிறார்

வட மாகாண அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கம் செய்தமையாலும், இருவரை கட்டாய விடுப்பில் அனுப்பியமையாலும் வடமாகாண முதலமைச்சர்மீது தமிழரசுக் கட்சியினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி விலக்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று மாலை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பதிலாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை ஏற்கனவே பரிந்துரை செய்தாலும் முக்கிய முடிவெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்கு செல்லவுள்ளார். இரா.சம்பந்தன் வருகைதந்ததன்பின்னர் யாழ்ப்பாணத்தில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9763

முள்ளியவாய்கால் நினைவேந்தலும் கூட்டமைப்பு தலைமை மீது அதிகரிக்கும் விரக்தியும்

mulli

ஒட்டுமொத்தத்தில் மானிடத்தை நேசிக்கும் எந்தவொரு மனிதனாலும் இலகுவில் மறந்து விட முடியாத மண்ணே முள்ளியவாய்கால். இந்த நாட்டின் ஒரு தேசிய இனமாகிய தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30 வருட அகிம்சைப் போராட்டத்தில் தமிழ் தேசிய இனத்தின் மிதவாத தலைவர்கள் ஈடுபட்ட போது தென்னிலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிரதான அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாததன் விளைவாக தமிழ் தேசிய இனம் உரிமைக்காக ஆயுதம் ஏந்த …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9548

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும் – வடமாகாண பட்டதாரிகள்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது பதவியிலிருந்து விலகவேண்டும் என வடமாகாண பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு இன்று வியாழக்கிழமை வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தம்மை வந்து பார்க்கவில்லை என்றும், தமது பிரச்சினைகள் குறித்து கேட்கவில்லை என்றும் ஆத்திரமடைந்த பட்டதாரிகள் முதலமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், “பட்டதாரிகளாகிய நாம் கடந்த 25 நாட்களாக யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். யாழ்.மாவட்ட …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9094

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது

koppu1

காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் காலை 128 குடும்பங்களிற்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8989

பிலக்குடியிருப்பில் 46 குடும்பங்களின் காணிகள் விடுவிப்பு

pilak

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்களின் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8977

கேப்பாப்புலவு தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் போராட்டம்

koppap

கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் குறித்த கவனயீர்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பதற்காக இன்றும் 23ஆவது நாளாக தமது போராட்டத்தினை தொடர்கின்றனர். கொள்கையில் மாற்றமில்லை காணியில் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8931

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு இணக்கம்

அலரி மாளிகையில் நேற்று நடந்த சந்திப்பில், காணாமலாக்கப்பட்ட 15 பேர் தொடர்பான விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்க இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8900

இலங்கையின் பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு, கிழக்கில்..

இலங்கையின் மிக முக்கியமான பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு மற்றும் கிழக்கிலேயே இருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மொத்தமாக 759 இடங்கள் தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிமல் ரத்னாயக்கவின் வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதை கூறியுள்ளார். அதன்படி வடக்கில், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 இடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 136 இடங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 இடங்கள் வவுனியா மாவட்டத்தில் 50 இடங்கள் மன்னார் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8897

பிரதமர் ரணிலை சந்திக்கும் கேப்பாப்பிலவு மக்கள்

கேப்பாப்புலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்றுடன் பத்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் சிலரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டார். கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரரணை ஒன்றைக் கொண்டு வந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்பு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8895

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்துக்கு சிங்கள மக்கள் ஆதரவு

koppa

கேப்பாபுலவுக்கு வருகைத்தந்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி சம்பத் புஸ்பகுமார மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பர்னாந்து ஆகியோர் கேப்பாபுலவு மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அத்தோடு இனிவரும் நாட்களில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக தென்னிலங்கை மக்கள் வருகைதர இருப்பதாகவும் தெரிவித்தனர். அதுமாத்திரமின்றி இந்த மக்களின் போராட்டம் நியாயமானது எனவும் விரைவில் இவர்களின் நிலங்களை இராணுவம் விடுவிக்கவேண்டுமெனவும் தெரிவித்தனர். இதில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8890

எழுக தமிழ்’ என பெயர் பெற்றது ஏன்?

எமது பவனி “எழுக தமிழர்” என்று பெயரிடப்படவில்லை. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலை நிறுத்தவே எமது பவனியானது “எழுக தமிழ்” என்று பெயர்பெற்றது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எழுக தமிழானது மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழ் பேசும் சகல மக்களையும் “எழுக தமிழ்” நடைபவனியில் பங்குபற்ற அழைக்கின்றேன். எம்மக்கள் மட்டக்களப்பு கல்லடிப் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8881

வடகிழக்கில் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் – சிறீதரன்

யுத்தம் முடிந்த பின்னர் தொழில்துறையிலான அபிவிருத்தி ஏற்படுத்தப்படாமையினால் வடகிழக்கு மாகாணங்களில் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பில்லாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்திறப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், விவசாய விளைபொருட்கள் விற்பனை மையமாக இருந்த இக்காணி மறைந்த கல்வி மான் பொன் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8867

வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைபடுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள 348 தீர்மானங்கள்!

வடமாகாணசபை 3 வருடங்கள் நிறைவில் 348 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அவைகிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை என அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடமாகாணசபையின் 82ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது. இதன்போதேஅவைத்தலைவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்றமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான இறுதி அமர்வில் வடமாகாணசபை 3 வருடங்களில்பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள போதும் அவை நடைமுறைபடுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதற்கு இன்றைய அமர்வில் பதிலளித்த அவை தலைவர் 348 தீர்மானங்களைநிறைவேற்றியிருக்கும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8722

யாழின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45 வீதமான நிதி செலவிடப்படுள்ளது

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 7724 மில்லியன் ரூபா நிதிதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8702

வடக்கின் பதில் முதல்வராக ஐங்கரநேசன் பதவியேற்பு

n.m

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வெளிநாட்டு பயணம் செல்வதன் காரணமாக, பதில் முதலமைச்சராக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்றைய தினம் பதவிஏற்றார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8683

காணாமற் போனோர் குறித்த தகவல்களை வெளிப்படுத்த கோரி வடக்கில் ஆர்ப்பாட்டம்

mis

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த கோரி இன்றைய தினம் வடக்கில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8504

இறுதி வரை அமைதி காத்த,முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கிழக்கு முதல்வர்

கடும்போக்குவாதிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு ஆட்கொள்ளாமல், எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இறுதி வரை அமைதி காத்த மட்டக்களப்பு மாவட்ட வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மன மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8452

வடக்கு முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க, 500 மில்லியன் ரூபா ஒதுக்கிய மைத்திரி!

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனின் கோரிக்கைக்கு இணங்க வடமாகாண சபைக்கான கட்டு நிதியில் மேலும் ஒரு தொகுதி நிதியாக 500 மில்லியன் ரூபா மத்திய திறைசேரி விடுவித்துள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரைக்கும் 34 வீதமான நிதிகளே மாகாணத் திறைசேரிக்கு கிடைத்தது. இந் நிலையில் நேற்றைய தினம் மேலும் ஒரு 500 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாணத் திறைசேரியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டிற்கான நிதியில் சுமார் 45 வீத நிதிகள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8445

“உதவிகள் வழங்குவதில் பாரபட்சம்” முல்லையில் ஆர்ப்பாட்டம்

1479463943_download

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் மாற்றுவலுவுடையோர் இணைந்து இன்று முல்லைத்தீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8355

தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்தினால் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் – சதாசிவம் வியாழேந்திரன்

சதாசிவம் வியாழேந்திரன்

வட-கிழக்கில் தமிழ் மக்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்தினால் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் இன்று(09) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இது பற்றி தெரிவிக்கையில், கடந்த 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வடக்கில் தமிழர்களை அதிகளவில் இனப்படுகொலை செய்த இடமாக முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை அடையாளப்படுத்தப்பட்டு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8297

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பம்

mulli

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று செம்மணியில் சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 18 ஆம் திகதி புதன்கிழமை வரையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் “1948 ஆம் ஆண்டு முதல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவரையும் நினைவுகூறும் முகமாக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இன்று …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8167

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.