மட்டக்களப்பு செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு DNA பரிசோதனை தேவை –சிறிநேசன் எம்.பி.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு DNA பரிசோதனைகள் செய்யவேண்டிய தேவையிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். புதிய அரசியல் யாப்பினை குழப்பும் வகையில் செயற்படும் மகிந்தராஜபக்ஸவுடன் எந்த வகையிலும் கைகோர்த்து செயற்படமுடியாது எனவும் அவர் தெரிவித்தார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12183

கழிவுகளை கொட்டுவதற்கான தடையுத்தரவு மட்டக்களப்பு மேல் நீதிமன்றால் நீக்கம்

மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையினால் மேல் நீதிமன்றில் குறித்த தடையினை நீக்குமாறு கோரும் மனு தாக்கல்செய்யப்பட்டது. இதனை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடின் குறித்த தடையுத்தரவினை நீக்கியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணை எதிர்வரும் 04 ஆம்திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜாவினால் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10547

கல்லடி பாலத்திலிருந்தில் குதித்து மாணவன் தற்கொலை முயற்சி

kalladi

மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் இருந்து குதித்து மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், பாலத்திலிருந்து குதித்த மாணவனை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். நாகமுனை, அம்பிளாந்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான புவனுசன் மாணவனே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் உயர் தரத்தில் கல்வி கற்று வருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9716

மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு

sea

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் வீசிவரும் கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எம்.ருக்ஷான் குரூஸ் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக மாவட்டத்தின் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பூநொச்சிமுனை, ஏத்துக்கால, புன்னக்குடா, நாவலடி, வாகரை உட்பட பல கரையோர பிரதேசங்களில் கடும் காற்று வீசி வருகின்றது. கடல் கொந்தளிப்பு மற்றும் காற்று காரணமாக மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாமென, கடற்றொழில் திணைக்களம் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9590

மட்டக்களப்பு மாணவர்களிற்கு வந்தது ஆப்பு – கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த தடை

மட்டக்களப்பில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதால் கல்வி மாத்திரமன்றி நமது கலாச்சாரத்திலும் சீரழிவுகள் ஏற்படுகின்றது. இதற்கு பெற்றோர்களே காரணமாக இருக்கின்றார்கள். எனவே உங்கள் பிள்ளைகளிடம் உள்ள கைத்தொலைபேசிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நீதி மன்ற அனுமதியுடன் பாடசாலைகள், தனியார்கல்விநிலையங்களுக்கு சென்று நாம் கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்வோம் என மட்டக்களப்பு மாவட்ட சிறுவர், பெண்கள் பிரிவுநன்னடத்தை பொறுப்பதிகாரி என்.சுசீலா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார்.. மட்டகளப்பு தலைமை பொலிஸ் நிலையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு “கைத்தொலைபேசியின் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9580

மட்டு. மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கிய நிதி எங்கே? பொது மக்கள் கேள்வி

mn1

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்தவருடம் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிதி இன்றுவரை செலவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. குறிப்பாக மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக புனர்வாழ்வு அமைச்சினால் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதி இதுவரை உரிய பயனாளிகளுக்கு உதவிகளாக வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. கடந்த வருடம் தங்களது வாழ்வாதாரத்திற்காக பால்பசு வளர்ப்பு திட்டத்தில் கறவைபசுக்கள் வழங்குவதாக அரச அதிகாரிகள் உறுதியளித்திருந்தும் இதுவரை தமக்கு உரிய உதவிகள் கிடைக்கவில்லை என பயனாளிகள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9387

இன்று மட்டக்களப்பில் பாரிய எழுச்சியுடன் ‘எழுக தமிழ்’

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது. யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தருமலிங்கம் சித்தார்தன் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8902

இலங்கையின் பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு, கிழக்கில்..

இலங்கையின் மிக முக்கியமான பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு மற்றும் கிழக்கிலேயே இருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மொத்தமாக 759 இடங்கள் தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிமல் ரத்னாயக்கவின் வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதை கூறியுள்ளார். அதன்படி வடக்கில், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 இடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 136 இடங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 இடங்கள் வவுனியா மாவட்டத்தில் 50 இடங்கள் மன்னார் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8897

எழுக தமிழ் பேரணிக்கு முழுமையாக கைகோர்க்கும் கிழக்கு மக்கள்

வடக்கை தொடர்ந்து கிழக்கில் நாளைய தினம் (10) ஒலிக்க இருக்கும் ‘எழுக தமிழ் பேரணிக்கு’ கிழக்கு மக்கள் முழுமையாக கைகோர்த்து பெரும் ஆதரவை வழங்குவதற்கு அனைவரும் தயாராக இருப்பதாக எழுக தமிழ் தொடர்பாக மக்களின் கருத்துக் கணிப்புத் தெரிவித்துள்ளது. கடந்த மாதங்களாக ‘எழுக தமிழ்’ பேரணிக்கு அழைப்பு விடுத்து கிழக்கில் நடைபெற்ற ஆதரவு பிரச்சார கருத்துக் கணிப்பின் அடிப்படையில் குறித்த மக்களின் கருத்துக் கணிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் பேரவை முன்வைக்கும் கருத்துக் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8893

எழுக தமிழ்’ என பெயர் பெற்றது ஏன்?

எமது பவனி “எழுக தமிழர்” என்று பெயரிடப்படவில்லை. இந்து, முஸ்லீம், கிறீஸ்தவ சகோதரத்துவத்தை அவர்களின் பொது மொழியாம் செந்தமிழ் ஊடாக நிலை நிறுத்தவே எமது பவனியானது “எழுக தமிழ்” என்று பெயர்பெற்றது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எழுக தமிழானது மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய இருப்பதை நீங்கள் அறிவீர்கள். தமிழ் பேசும் சகல மக்களையும் “எழுக தமிழ்” நடைபவனியில் பங்குபற்ற அழைக்கின்றேன். எம்மக்கள் மட்டக்களப்பு கல்லடிப் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8881

கிழக்கின் எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும்! – தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு

கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ்ச்சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையினால் தமிழர் தேசம், பிரிக்கப்படாத வடகிழக்கு தமிழர் தாயகம், இறைமை, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணியில் பங்குபெற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். மேலும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8752

இறுதி வரை அமைதி காத்த,முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கிழக்கு முதல்வர்

கடும்போக்குவாதிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு ஆட்கொள்ளாமல், எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இறுதி வரை அமைதி காத்த மட்டக்களப்பு மாவட்ட வாழ் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மன மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8452

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக புற்றுநோய்க்கு சத்திரசிகிச்சை

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த சிகிச்சையானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோயாளர் வைத்தியசாலையில் இன்று(17) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளைக்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சத்திர சிகிச்சை கூடத்தின் மூலம் இன்று தொடக்கம் புற்றுநோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் எம்.இப்றாலெப்பை தெரிவித்தார். சகல புற்றுநோய்களுக்குமான சத்திர சிகிச்சைகள் இங்கு வழங்கப்படவுள்ளதாகவும், இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள புற்றுநோயாளர்கள் இதன்மூலம் உயர்தரமான சத்திரசிகிச்சையினை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8345

ஊழல் இல்லாமல் கிழக்கில் அபிவிருத்தி – கிழக்கு முதலமைச்சர்

habis

ஊழல் மோசடி என்ற விடயங்கள் இல்லாமல் அரசினால் ஒதுக்கப்படுகின்ற நிதிகளை வைத்து கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தனது உரையில் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை நாசீவந்தீவில் பொது நூலக கட்டடம் மற்றும் குடிநீர் தாங்கிக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8253

எதிர்க் கட்சி தலைவர் மட்டக்களப்பிற்கு விஜயம்

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் அவர்களின் அழைப்பின்பேரில் எதிர் கட்சித் தலைவரின் விஜயத்தின்போது மண்டூரில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையை உத்தியோக பூர்வமாக காலை 09.30 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் மற்றும் சித்தாண்டியில் அமைந்துள்ள கால் நடைத் தீவன உற்பத்தி தொழிற்சாலையையும் மாலை 3.00 மணிக்கு திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7949

மட்டக்களப்பில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியிலுள்ள தனியார் காணி ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மலசலகூட அறையொன்றில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7576

180 நாள்களுக்குள் வீதி விபத்துக்களினால் 53 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

accident

180 நாள்களுக்குள் வீதி விபத்துக்களினால் மட்டக்களப்பில் 53 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் என். சசிநந்தன் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5457

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5447

களுவாஞ்சிகுடியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். 15வயதையுடைய சிறுவனே இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் இவர் நீதிமன்றினால் சிறுவர் சீர்திருத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4849

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிசாருக்கு டிமிக்கிவிடும் கொள்ளையர்கள்!

மட்டக்களப்பு செங்கலடி நகரில் பொலிசாருக்கு சவால்விடும் வகையில் தொலைத்தொடர்பு நிலையமொன்றை ஒரு மாதத்திற்குள் இரு முறை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4319

செங்கலடி இரட்டைக் கொலை நாயகி ரகு தக்ஷனாவுக்கு பிணை!

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கின் நான்காவது சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4176

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­ல்886 மாண­வர்கள் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்தி

hqdefault

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள மட்­டக்­க­ளப்பு, பட்­டி­ருப்பு, கல்­குடா, மட்­டக்­க­ளப்பு மத்தி, மட்­டக்­க­ளப்பு மேற்கு ஆகிய ஐந்து வலயக் கல்விப் பிரி­வு­க­ளி­லு­மி­ருந்து இவ்­வ­ருடம் 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்­களில் 886 பேர் சித்­தி­ய­டைந்­துள்­ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4152

வாழைச்சேனையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

IMG_

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொத்தானைக்குளத்தில் இன்று புதன்கிழமை (08) நீராடிய எம்.அம்ராஸ் என்ற 08 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4102

யானைகளை துரத்தும் பொறி மட்டு.இளைஞனால் கண்டுபிடிப்பு!

elephant_pori_004

மட்டக்களப்பு திருப்பெருந்துறையைச் சேர்ந்த சோமசூரியம் திருமாறன் என்பவர் காட்டு யானைகளைத் துரத்த பொறி ஒன்றைத் தயாரித்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3844

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் குளங்­களைப் புன­ர­மைக்கும் பணிகள் ஆரம்பம்!

kulam

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏழு குளங்­களைப் புன­ர­மைக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட திட்­ட­மிடல் பணிப்­பாளர் இரா­.நெ­டுஞ்­செ­ழியன் தெரி­வித்தார்.இதற்­காக 3கோடி­ரூபா நிதி­யொ­துக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள­தா­கவும் இத­ன­டிப்­ப­டையில் தற்­போது சின்­ன­புல்­லு­மலை களிக்­குளம்,கர­டி­ய­னாறு அன்­புக்­குளம் என்­பன புன­ர­மைக்­கப்­பட்டு வரு­வ­தாக மாவட்ட திட்­ட­மிடல் பணி­யகம் அறி­வித்­துள்­ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3808

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.