திருகோணமலைச் செய்திகள்

திருகோணமலையில் மக்கள் கடலில் இறங்கி போராட்டம்

trin

காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடலில் இறங்கி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர். ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தங்களின் கோரிக்கைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிட்டவில்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9773

இலங்கையின் பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு, கிழக்கில்..

இலங்கையின் மிக முக்கியமான பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு மற்றும் கிழக்கிலேயே இருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மொத்தமாக 759 இடங்கள் தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிமல் ரத்னாயக்கவின் வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதை கூறியுள்ளார். அதன்படி வடக்கில், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 இடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 136 இடங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 இடங்கள் வவுனியா மாவட்டத்தில் 50 இடங்கள் மன்னார் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8897

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.