யாழ்ப்பாணச் செய்திகள்

அதிகரித்துவரும் வெப்பம்; பொதுமக்கள் அவதானம்!

ஸ்ரீலங்காவின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, யாழ். மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழக திட்டமிடல் துறையில் கல்விபயிலும் மாணவியான அ. ஏஞ்சல் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9256

இலங்கையின் பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு, கிழக்கில்..

இலங்கையின் மிக முக்கியமான பொக்கிஷங்களாக கருதப்படும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வடக்கு மற்றும் கிழக்கிலேயே இருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மொத்தமாக 759 இடங்கள் தற்போதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பிமல் ரத்னாயக்கவின் வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதை கூறியுள்ளார். அதன்படி வடக்கில், கிளிநொச்சி மாவட்டத்தில் 14 இடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 136 இடங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 48 இடங்கள் வவுனியா மாவட்டத்தில் 50 இடங்கள் மன்னார் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8897

வடக்கு குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க புலம்பெயர் மக்கள் ஒத்துழைப்பு

வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க புலம்பெயர் மக்கள் முன்வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7822

நல்லாட்சி அரசாங்கமே கருணை காட்டு: யாழ். நகரில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நல்லாட்சி இருக்கும் போது நாம் நடுவீதியில் கண்ணீரும் கம்பளையுமாயிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கமே கருணை காட்டு என யாழ். நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக விடுதலை செய்யப்பட்ட கோமகன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வந்தார். இந்நிலையில் மேலும் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7750

யாழ்ப்பாணத்தில் நில அதிர்வு!: மக்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை

jaffna_nilanatukkam03

யாழ். அச்சுவேலி பகுதியில் இன்று ஏற்பட்டது நில அதிர்வுதானா? என்பதை உறுதியாக கூற முடியாது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக குறித்த பகுதியிலுள்ள நிலங்கள் மற்றும் வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டனர். இது தொடர்பில் லங்காசிறி செய்தி சேவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தொடர்பு கொண்டு வினவிய போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7512

யாழ் மாவட்டம் கடலில் மூழ்குமா?

யாழ் மாவட்டம் கடலில் மூழ்குமா என்ற ஐயம் தேவையற்றது. கடல் மட்டத்திற்கு மேலேயுள்ள யாழ்ப்பாணம் தரைத்தொடுகையைப் பேணும் ஒரு இடமாக ஆனையிறவிலுள்ள சிறிய நிலப்பரப்பு இருக்கின்றது. எனவே நீர் தங்குவதற்காக வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் ஆனையிறவுப் பகுதி மூழ்கி யாழ்ப்பாணம் ஒரு தீவாகலாம். 1.012 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புள்ள யாழ் மாவட்டத்தில் 120,000 கிணறுகள் உள்ளன. மேலதிகமான நீரையகற்றுவதற்கு யாழ்ப்பாணத்தில், ஆயிரத்திற்கு மேற்பட்ட குளங்களும், 2500 வாய்க்கால்களும் இருக்கின்றன என்பது உள்ளிட்ட பல விடயங்களை ஆய்வாளர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7344

யாழில் நத்தார் கொண்டாடும் மைத்திரி!

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையான மீள்குடியேற்றப்படாத நிலையில், யாழில் இடம்பெற்ற அரச நத்தார் கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாமுக்கு விஜயம் செய்தார். இதன்போது அங்குள்ள மக்களின் உரையாடிய மைத்திரி அவர்களின் சுகநலன்களை விசாரித்தார். மயிலிட்டி, காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் முன்னயை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7319

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்

யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7248

காணாமல் போனோர் தகவல்களை வெளியிடுங்கள் : யாழில் ஆர்ப்பாட்டம்

சம உரிமை இயக்கத்தினால் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் செய்யப்பட்டோர் குறித்த தகவல்களை வெளியிடுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7195

வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலை

Buddha_Sri_Lanka

வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாணம் நாகதீப விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமதிஸ்ஸ தேரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7135

யாழில் காணாமற்போனோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அலுவலகத்திற்கு எதிராக காணாமற்போனோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7077

யாழ்ப்பாணத்தில் 1000 கைதிகளை அடைத்து வைக்கும் புதிய சிறைச்சாலை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான சிறைச்சாலை இன்றைய தினம் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட புதிய சிறைச்சாலை கட்டிடத்தை அமைச்சர் இன்றைய தினம் மாலை 2.30 மணிக்கு திறந்து வைத்தார். புதிய சிறைச்சாலை வளாகம், நவீன தொழில் நுட்ப வசதிகள் மற்றும் மருத்துவமனை, மற்றும் கைதிகளுக்குப் போதிய இடவசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 2.5 ஏக்கர் நிலத்தில் 272 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய சிறைச்சாலை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6994

கிளிநொச்சியில் கொள்ளையர்களுடன் போராடி 3 லட்சம் ரூபாவைக் காப்பாற்றிய பெண்!

thief

கிளிநொச்சியில் 30ம் திகதி கடனாக பெற்றுச் சென்ற மூன்று லட்சம் ரூபா பணத்தை நடு வீதியில் இரு திருடர்களுடன் போராடி பணத்தைக் காத்துக் கொண்ட பெண்மணியொருவர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் பகுதியில் வசிக்கும் 31 வயதை உடைய பெண் ஒருவர் நகரின் மத்தியில் உள்ள ஓர் அபிவிருத்தி வங்கியில் மூன்று லட்சம் ரூபா பணத்தை கடனாக பெற்றுள்ளார். இவ்வாறு பணத்தைப் பெற்றவர் உருத்திரபுரம் பகுதிக்கு தனித்துச் செல்வதனை அவதானித்த இருவர் உந்துருளியில் பின்தொடர்ந்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6986

யாழ்.மறைமாவட்ட ஆயராக ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமனம்

யாழ்.மறைமாவட்ட ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் பி.ஞானப்பிரகாசம் பாப்பாண்டவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனம் குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் வைத்த ஆயர் மேதகு தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். யாழ்.மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகியவற்றின் அதிபராகக் கடமையாற்றியதுடன் யாழ்.ஆயர் இல்லத்தின் குருமுதல்வராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6883

யாழில் பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளை.

யாழ்.திருநெல்வேலி சிவன், அம்மன் கோவிலடி பகுதியில் பூட்டியிருந்த வீட்டை திறந்து பெருமளவு தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில் தாய், தந்தை இருபெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் வசித்து வந்த வீட்டிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மேற்படி மூன்று பெண் பிள்ளைகளும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் அவர்களது பெற்றோரும் வெளியில் சென்றுள்ளனர். இதனையடுத்து மாலை அனைவரும் வீடு திரும்பிய போதும் குறித்த விடயம் தொடர்பில் அவதானித்திருக்கவில்லை எனவும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6851

யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

Jaffna-court

இனந்தெரியாத ரௌவுடிக் கும்பலொன்று பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டிலிருந்தவர்களை தாக்கியமைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி, பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரண்டு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டிருந்ததுடன் அவர்களில் ஒரு தரப்பினர், சட்டத்தரணியின் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை துன்புறுத்தி, வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியிருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள், நீதிமன்றங்களுக்கு செல்லாது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6834

யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி!

யாழ் .மாவட்டத்தில் வெளியான இறுதி முடிவுகளின்படி 69.12 வீதமான 207, 577 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசுக்கட்சி ஐந்து ஆசனங்களை வென்றெடுத்துள்ளது. அடுத்து 10.07 வீதமான 30,232 வாக்குகளை பெற்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி ஒரு ஆசனத்தையும், 6.67 வீதமான 20,025 வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6422

சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் எண்ணம் இளைஞர் யுவதிகளுக்கே உண்டு – விக்கினேஸ்வரன்

சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் இளைஞர், யுவதிகளாகத் தான் இருப்பார்கள். வயதிலே இருப்பவர்கள் சமுதாயத்தை இருக்கும் விதத்திலேயே கொண்டு நடத்தவே சிந்திக்கின்றார்கள். சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் எண்ணம் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.ஆகவே சமுதாயத்தில் மறுமலர்ச்சியை கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள் இளைஞர்களே இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6365

நீதிமன்றத் தாக்குதல் யாழ்.மாவட்டத்தின் கலாசார சீரழிவு, காடைத்தனம், ரவுடித்தனம், வன்முறை ஆட்டத்தின் உச்சகட்டத்தை வெளிப்படுத்துகின்றது – நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, யாழ் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் தொடர்பான சந்தேக நபர்களுக்கான 22 பிணை மனுக்கள் மீதான விசாரணையின்போது, நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, யாழ் மாவட்டத்தின் கலாசார சீரழிவு, காடைத்தனம், ரவுடித்தனம், வன்முறை ஆட்டத்தின் உச்சகட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன என தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன் அந்த மனுக்கள் மீதான விசாரணைகளை நீடிய திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார். இந்த மனுக்கள் வியாழனன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6267

யாழில் கஞ்சா கலந்த மருந்துப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை என்பன கைப்பற்றப்பட்டது.

கஞ்சா கலந்த மருந்துப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை என்பற்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கஸ்த்தூரியார் வீதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யு.கே. வூட்லர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் பாடசாலை மாணவர்களை போதையில் இருந்து பாதுகாத்தல் தொடர்பில் யாழ்ப்பாண தலைமைப்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. பாடசாலை ரீதியாகவும், தனியார் வகுப்புக்கள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6216

யாழில். மோட்டார் சைக்கிளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா மீட்பு.

யாழ் . முனீஸ்வரர் கோயிலுக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சா யாழ். பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6116

வயலுக்குள் இருந்து சடலம் மீட்பு ; காணாமல் போன சிறுமியினதா என சந்தேகம்.

dead-body

குஞ்சுப் பரந்தன் ,பொறிக்கடை பகுதியில் நெல்வயலுக்கு நடுவே பெண் குழந்தை ஒன்றின் சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6113

யாழில் குடும்பஸ்தரை காணவில்லை.

missing

யாழ்ப்பாணம் – மல்லாகத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவராம் (34 வயது) என்ற இளம்குடும்பஸ்தரைக் கடந்த நான்கு நாட்களாகக் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கே.கே.எஸ். வீதி மல்லாகத்தில் தொலைத் தொடர்பு நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதற்குப் பதிலளித்தவாறு தனது மோட்டார் சைக்கிளில் குறித்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6042

யாழில் 13 உறுப்பினர்களுக்கு 462 வேட்பாளர்கள் போட்டி.

metal13

வடக்கு மாகாணத்தில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக,462 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6039

யாழில் ஜனநாயக போராளிகள் அமைப்பு வேட்பு மனு தாக்கல்

யாழ்.மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தது ஜனநாயக போராளிகள் அமைப்பு பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிடும் நோக்கில் சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையிலான ஜனநாயகப் போராளிகள் அமைப்பு இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் அவ்வமைப்பு வேட்புமனுத் தாக்கல் செய்தது. நடேசப்பிள்ளை வித்தியாதரன் தலைமையில். கணேசலிங்கம் சந்திரலிங்கம், இராசையா தர்மகுலசிங்கம், சிவநாதன் நவீந்திரா, விநாயகசுந்தரம் மோகனசுந்தரம், காளிக்குட்டி சுப்பிரமணியம், தங்கராசா தேவதாசன், சிவகுரு முருகதாஸ், குமாரவேலு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6029

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.