சிறப்புச் செய்திகள்

இலங்கை வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்குஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார். இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11073

முதுகெலும்பிருந்தால் கட்சியைவிட்டு விலகி அரசியல் செய்யுங்கள் : ஜனாதிபதி

புதிய கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என ஊடகக் கலந்துரையாடலில் குறிப்பிடுகின்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியல்லாது வேறு கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு கூறுவது நகைப்புக்கிடமானதாகும் என்றும் மனச்சாட்சிக்கேற்ப அரசியலில் ஈடுபடுமாறு தாம் அவர்களுக்கு கூறுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று பிற்பகல் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் செயலாளரும் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் கடந்த அரசாங்கத்தில் உயர்பதவிகளை வகித்தவர்களாகவும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11071

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அறிவித்தது நீதிமன்றம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தில் வினவியதன் அடிப்படையில் அதுபற்றி ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11069

ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் வினவப்பட்டமை தொடர்பில் உண்மை வெளியாகியது.!

susil

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் காலத்தை அறிந்துகொள்ளவே ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் குறித்து வினவப்பட்டதே தவிர ஜனாதிபதி தொடர்ந்தும் ஆட்சியில் நிலைத்து நிற்பதற்காக அல்ல. ஜனாதிபதி ஆட்சிக்காலம் குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதைய ஜனாதிபதிக்கு அது பொருந்தாது என அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கூறினார் . அரசியல் அமைப்பின் 19 ஆம் திருத்தம் மூலமாக ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பொருந்தும் ஒன்றல்ல. ஜனாதிபதி தேர்தலை எப்போது நடத்துவது என்ற கேள்வி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11066

ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் குழப்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற நாள் முதல் ஆறு வருடங்கள் (2021 வரை) அவர் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என சட்டமா அதிபர் சற்று முன்னர் தெரிவித்தார். தன்னால் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் அபிப்பிராயம் கோரியுள்ள நிலையில், அது குறித்து ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு ஆராய்ந்து வருகின்றது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று உயர் நீதிமன்றில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11064

பாடசாலைகளில் ஜன.15 முதல் மாணவர் சேர்க்கை

gra1

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை – 15.01.2018 – அன்று ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு கொழும்பு, இஸிபத்தன கல்லூரியில் தேசிய நிகழ்வு ஒன்று நடத்தப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திகதிக்கு அமைவாகவே அரசு தவிர்ந்த ஏனைய அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாடசாலைகளும் புதிய மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11061

பாராளுமன்றத்தில் அமளிதுமளி : மரிக்காரின் கன்னத்தில் அறைந்தார் காமினி லொக்குகே

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த போது பொது எதிரணி மற்றும் ஆளுங்கட்சியினருக்கிடையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதையடுத்த பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11059

முன்னைய ஊழல் மோசடிகள் குறித்து எவரும் பேசுவதில்லை – ஜனாதிபதி

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து தற்போது அனைவரும் பேசுகின்றனர். ஆனால், அதற்கு முன்னர் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்து எவரும் பேசுவதில்லை. அந்த விடயங்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11055

அரசியல் சர்ச்சைகள், நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்

பல்வேறு அரசியல் சர்ச்சைகள், கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் இன்றைய தினம் விசேட பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறுகின்றது. இந்த விசேட அமர்வில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பில் விவாதம் நடத்துவது குறித்து தீர்மானிக்கும் நோக்கிலேயே இன்று பாராளுமன்றம் கூடுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11053

சுதந்திரக் கட்சியின் பங்காளிகளுடன் ஜனாதிபதி நாளை அவசர சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளதோடு மதிய போசன விருந்தும் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா இரண்டு முக்கிய பிரதிநிதிகளை பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தகவல்கள் தெரிவித்துள்ளன. உள்ளுராட்சி மன்றங்களுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சியும், அதன் பங்காளிகளும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11051

விசேட பாராளுமன்ற அமர்வு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விசாரிக்கும் நோக்கில் பாராளுமன்றம் எதிர்வரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக் கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கூட்டப்படும் என தெரியவருகிறது. விசேட பாராளுமன்ற அமர்வைக் கூட்டி இது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடத்தவிருக்கிறார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றில் நடைபெறவுள்ள இந்தக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளினதும் செயலாளர்களுக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கிறார். …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11049

“தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க அரசாங்கம் தயாரில்லை”

சகல தரப்பினதும் அனுமதி இல்லாது புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாகப்போவதில்லை. அதேபோல் இருக்கும் அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவதிலும் அனைத்து தரப்பினதும் அனுமதி அவசியம். புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க மாட்டோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஊழல் குற்றவாளிகளை தண்டிப்பதில் நாமே முதலில் நிற்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இன்று மத்திய வங்கி பிணைமுறி விவாகரத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்தக் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11047

பிணைமுறி அறிக்கை சரியா, தவறா? குழப்பும் ரவி!

பிணைமுறி விவகாரம் குறித்து ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கையளித்திருக்கும் அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் அறிக்கையில், வங்கிக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்பட்டுள்ளதை மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளார் ஐ.தே.க. வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் ஒன்று கொழும்பு ப்ளூமெண்டோல் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அவரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “குடும்பம் என்று ஒன்று இருந்தால் அங்கே குழப்பம் என்ற ஒன்றும் இருக்கும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11045

“அரசின் தவறைச் சுட்டிக்காட்ட நல்லதொரு வாய்ப்பு”: கோத்தா

நல்லாட்சி அரசின் மந்தமான செயற்பாடு குறித்த அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையில் மக்கள் எதிர்வரும் தேர்தலைப் பயன்படுத்தலாம் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (6) நடைபெற்ற இலங்கை மக்கள் முன்னணி ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில், வெளிநாட்டில் இருந்தவாறே ‘ஸ்கைப்’ மூலம் இணைந்துகொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். “தற்போதைய அரசு நாட்டின் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தாமல் தமது அரசியல் நோக்கங்களை அடைவதில் மட்டுமே கரிசனை காட்டிவருகிறது. “உலகளவில் இவ்வரசு வெற்றிபெற்றதாகத் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11043

அடுத்த ஆட்சியிலேயே பிணைமுறி மோசடிகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை – வாசுதேவ நாணயக்கார

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு எதிராக நியாயம் கிடைக்கப்போவதில்லை. எனவே அடுத்துவரும் ஆட்சியின் போதே குறித்த மோசடிகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கூட்டு எதிரணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு பொரளையில் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்தியவங்கி பிணைமுறி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11034

பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை.!

குற்றப் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி), நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (எப்.சி.ஐ.டி.), விசேட விசாரணைப் பிரிவு ( எஸ்.ஐ.யூ.), கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு ( சி.சி.டி.), கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு (சி.எப்.பி.) போன்ற விசேட விசாரணைப் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். அதே போன்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்புப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11028

இலங்கை போக்குவரத்து சபையின் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்வு – சி.வி.

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தினர் மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் எதிர்வரும் மாதத்தில் இருந்து இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் சீரான உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளதாக அவரது செயலாளர் விஜயலக்ஷமி கேதீஸ்வரன் தெரிவித்தார். வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் நடத்திவந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை அடுத்து கொழும்பில் இருந்து வந்த இ.போ.ச. தலமை அலுவலகத்தின் அதிகாரிகள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11026

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகின்றார்.

Japan's Foreign Minister Taro Kono speaks at a news conference in Tokyo

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் டாரோ கோனோ இன்று இலங்கைக்கு வருகின்றார். இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கை வருகின்றார். எனவே இந்த விஜயமானது ஆக்கப்பூர்வமானதாகவும் இரு தரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் அமையும் என ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11023

அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகள்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இதுவரை 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 36 முறைப்பாடுகள் தேர்தல் குறித்தவை என்றும் 17 முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் சுவரொட்டிகளை அனுமதியின்றி ஒட்டுதல், பதாகைகளை அனுமதியின்றிக் காட்சிப் படுத்தல், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தல் மற்றும் வாகனங்களில் அனுமதியின்றி தேர்தல் விளம்பரங்களை ஒட்டுதல் என்பன குறித்தே அதிகளவு புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11021

கால எல்லை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டிப்பு

சிதைக்கப்பட்ட, பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை மத்திய வங்கி நீட்டித்துள்ளது. பழுதடைந்த அல்லது பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக இன்று வரை, அதாவது டிசம்பர் 31ஆம் திகதி வரை மத்திய வங்கி கால அவகாசம் வழங்கியிருந்தது. எனினும் அந்தக் கால எல்லையை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இனியும் அந்தக் கால எல்லை நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரியவரும் நிலையில், அவ்வாறான நாணயத் தாள்களைப் பெற்றுக்கொள்வதைத் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11019

அமைச்சரின் பேச்சை மறுக்கும் மருத்துவர் சங்கம்

சைட்டம் மருத்துவக் கல்லூரி பட்டதாரிகளை உள்ளீர்க்க இலங்கை மருத்துவர்கள் சங்கம் சம்மதித்திருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வெளியிட்ட தகவலை இலங்கை மருத்துவர்கள் சங்கம் மறுத்திருக்கிறது. பட்டமளிப்பு விழா ஒன்றில் நேற்று (30) கலந்துகொண்ட லக்ஷ்மன் கிரியெல்ல, சைட்டம் மருத்துவக் கல்லூரியின் பட்டதாரிகளை, ஐந்து வார பயிற்சியின் பின் இலங்கை மருத்துவர்கள் சங்கம் அங்கீகரிக்க சம்மதித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார். எனினும் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை மருத்துவர்கள் சங்க பதிவாளர் டொக்டர் டெரன்ஸ் டி சில்வா, இது உண்மைக்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11017

சைட்டம் பட்டதாரிகளை அங்கீகரிக்க முடிவு

சைட்டம் மருத்துவக் கல்லூரியால் மருத்துவப் பட்டம் வழங்கப்பட்டவர்களை ஐந்து வார மருத்துவப் பயிற்சிக் காலத்துடன் ஏற்று அங்கீகரிப்பதற்கு இலங்கை மருத்துவச் சபை ஒத்துக்கொண்டுள்ளது. இத்தகவலை, இன்று (30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்துகொண்டு பேசிய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அமைச்சர், மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டார். “கடந்த எட்டு மாதங்களாக மருத்துவ பீட மாணவர்கள் விரிவுரைகளைப் புறக்கணித்துள்ளனர். இதன்மூலம் தோற்றுப் போனது அவர்கள்தானே …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11015

சேதமடைந்த நாணயத்தாள்கள் நாளை முதல் செல்லுபடியற்றதாகும்

சேதமடைந்த நாணயத்தாள்கள் நாளை முதல் செல்லுபடியற்றதாகும். எனவே சேதமடைந்த நாணயத் தாள்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கள் மற்றும் கிழிந்த நாணயத் தாள்களை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள இலங்கை மத்திய வங்கி கிளைகளில் மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாணயத்தாள்களில் எழுதுதல், அவற்றை ஏதேனும் ஒரு வகையில் சிதைத்தல் மட்டுமல்லாது அவற்றை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எனவே …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11013

கூட்டமைப்பை விமர்சிப்பவர்களுக்கு விரைவில் உரிய பதிலை வழங்குவோம்

வடமாகாண முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பினை விமர்சிப்பவர்களுக்கு உரிய பதில் வழங்குவோம் எனத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ஊரைப்பற்றித் தெரியாதவர்கள் ஐ.நா. விடயங்களைப் பற்றி பேசுகின்றார்கள். நீங்களும் அவ்வாறு செயற்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரச்சினைகள், சர்ச்சைகள், கருத்து மோதல்கள் இருந்தாலும் கூட்டமைப்புக்குள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11011

இலங்கை வருகிறார் யப்பான் வெளிவிவகார அமைச்சர்

யப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ , ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11007

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.