«

»

இலங்கை தேயிலைத் துறைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படப்போவதில்லை.

tea
தற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எமது நாட்டுத் தேயிலையில் எந்தவித பூச்சிகளும் இல்லை. கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பூச்சியினம் எமது நாட்டில் இல்லை என்று இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார்.
தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் அதன் தலைவரை சந்தித்த ஊடகவியலாளர்கள் சமகாலத்தில் எழுந்துள்ள தேயிலை பிரச்சினை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்றுமதி செய்யப்பட்ட இலங்கை தேயிலையில் ஒரு வகை பூச்சியினத்தின் தாக்கம் இருப்பதாக ஊட¬கங்கள் வாயிலாக பரவலாக அறிய முடிகின்றது. ஆனால் எம்மைப்பொறுத்த வரையில் அவ்வாறான ஒரு பூச்சியின் தாக்கம் இருப்பதாக தெரியவில்லை. இந்த கெப்ரா என்ற பூச்சி இனம் இலங்கையில் எங்கும் இல்லை. அதேபோன்று தேயிலை மலைகளிலும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த பூச்சி இனம் தேயிலைகளில் இல்லையெனவும், தேயிலையை ரஷ்யாவுக்கு ஏற்றிச் சென்ற கொள்கலன்களிலே இந்த பூச்சி வகை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவ்வாறு நடைபெற்றதா என்பது தொடர்பில் தெளிவாக கூற முடியாது.
எனினும் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலை துறைக்கு இது புதியதொரு பிரச்சினை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இந்த பிரச்சினை தொடர்பிலும், பூச்சி இனம் எவ்வாறு ஊடுருவியது என்பதையும் கண்டறிவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வுகளின் பின்னர் இதற்கு சரியான தீர்வை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அது வரையில் தேயிலைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் உறுதியான கருத்துக்களை கூற முடியாது.
எனினும் இதனால் இலங்கை தேயிலைத் துறைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படப்போவதில்லை என்பதை மாத்திரம் தெரிவிக்க முடியும் என்றார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10971

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.