«

»

“தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க அரசாங்கம் தயாரில்லை”

champika
சகல தரப்பினதும் அனுமதி இல்லாது புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாகப்போவதில்லை. அதேபோல் இருக்கும் அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவதிலும் அனைத்து தரப்பினதும் அனுமதி அவசியம். புதிய அரசியல் அமைப்பு விடயத்தில் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க மாட்டோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஊழல் குற்றவாளிகளை தண்டிப்பதில் நாமே முதலில் நிற்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இன்று மத்திய வங்கி பிணைமுறி விவாகரத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கமாக நாங்கள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அந்தத் தீர்மானத்திலேயே நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் நாங்களே முன்னின்று செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹோமாகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11047

Leave a Reply

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.