«

»

முன்னைய ஊழல் மோசடிகள் குறித்து எவரும் பேசுவதில்லை – ஜனாதிபதி

president
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து தற்போது அனைவரும் பேசுகின்றனர். ஆனால், அதற்கு முன்னர் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்து எவரும் பேசுவதில்லை. அந்த விடயங்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி உள்ளூராட்சி தேர்தலில் தாம் ஒன்றிணைந்து வெற்றியை பெறவேண்டும். அதற்கான செயற்பாடுகளில் அனைவரும் ஈடுபடவேண்டும். தற்போது மத்திய வங்கி பிணமுறி விவகாரம் தொடர்பிலேயே பொது எதிரணியினர் உட்பட அனைவரும் பேசுகின்றனர். கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பான அறிக்கையும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்-து. அந்த விடயம் குறித்தும் உரிய விசாரணை இடம்பெறும் என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தலைவர் முத்து சிவலிங்கம், ஜனநாயக தொழிலாளர் சார்பில் அதன் தலைவர் பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, மற்றும் ஈ.பி.டி.பி. கட்சி பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11055

Leave a Reply

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.