«

»

கம்பீர் இடம்பெறுவார் என்று எதிர்பார்த்தேன் – கிளார்க்!

img113இந்திய டெஸ்ட் அணியில் கவுதம் கம்பீர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் சென்னையில் நேற்று தெரிவித்தார்.

கிளார்க் மேலும் கூறியதாவது: இந்திய டெஸ்ட் அணியில் கம்பீர் இடம் பெறுவார் என்று எதிர்பார்த்தேன். அவர் ஒரு அற்புதமான வீரர். இந்திய அணிக்காக நீண்ட காலமாக விளையாடி இருக்கிறார். அவர் இந்திய அணியில் இடம் பெறாததால், எங்களது பவுலர்களில் சிலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கம்பீர் ஒரு அருமையான மனிதர். அவருடன் விளையாடுவது உண்மையிலேயே எனக்கு பிடிக்கும். பயிற்சி ஆட்டத்தில் ரன்கள் குவித்து விட்டால், உறுதியாக இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்பு உள்ளது.

தற்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு அனுபவம் அதிகம் கிடையாது. நான் முதன் முதலாக இந்தியாவில் நடந்த டெஸ்டில் அறிமுகம் ஆன போது (2004-ம்ஆண்டு), எங்களது அணியில் அனுபவம் வாய்ந்த மற்றும் மிகச் சிறந்த வீரர்கள் 7- 8 பேர் இடம் பெற்று இருந்தனர்.

அந்த அணியுடன் ஒப்பிடும் போது இப்போது அனுபவம் குறைவு தான். முதல் டெஸ்ட்டுக்கு முன்பாக காயத்தில் இருந்து முழுமையாக விடுபடுவதற்காக இன்று தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் நானும், டேவிட் வார்னரும் விளையாடவில்லை. இவ்வாறு கிளார்க் கூறினார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1146

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.