«

»

எமது மக்கள் தற்செயலாக சாகவில்லை; கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் – விக்கினேஸ்வரன்

CV-Vigneshwaran-yaalaruvi
உரிமைகளைக் கேட்பது இக்கட்டான நிலையை ஏற்படுத்துமானால் நாம் மௌனம் சாதிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நாம் வாளாதிருந்தால் நாடு பூராகவும் சிங்கள பௌத்த மயமாக்கப்படும். பிழைகளை சிங்களத் தலைவர்கள் தம்வசம் வைத்துக்கொண்டு தமிழர்களை பிழை கூறுவது பொருத்தமானதன்று என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எமது உரித்துக்களைப் பெறும் வரையில் நாம் போராடாவிட்டால் நாம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
தமிழரை விரட்டியடிக்க வேண்டும் அவர்களின் அதிகாரங்களை குறைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்ட சிங்கள அரசியல் தலைவர்களால் தான் நாட்டில் இக்கட்டான நிலைமை ஏற்பட்டது. வடக்கில் தற்போது நடைபெறும் ஆக்கிரமிப்புக்களைப் பார்த்தால் தமிழர்கள் வடகிழக்கில் தொடர்ந்து பெரும்பான்மையினராக கணிக்க முடியாத நிலையே உருவாகி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாராந்த கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். புலிகளைத் தொடர்ந்து இந்த நாட்டில் ஒரு இக்கட்டான நிலைமையை உருவாக்க நீங்கள் நினைவேந்தல் கூட்டங்கள் மூலம் வழி அமைக்கிறீர்கள் அல்லவா? இவை தேவையா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் அளித்துள்ள பதில் வருமாறு,
பதில்: தேவை. மரணித்தவர்களின் நினைவை நாம் வருடந்தோறும் ஏந்தல் எமது பாரம்¬ப¬ரிய வழக்கம். அநியாயமாக கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவேந்தலை நடத்துவது வழக்கமான நினைவேந்தல்களை விட முக்கியமாகத் தேவையானதொன்று. எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம் என்று பல பசப்பு வார்த்தைகள் கூறி எம் மக்களைச் சதி செய்து கொன்ற நிகழ்வை நாம் நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது? போரில் இறந்தவர்களை நினைவு கூருவது, அவர் சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதென்பதெல்லாம் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அலகுகள். ஆகவே நினைவேந்தலின் முக்கியத்துவத்தை நீங்கள் இப்போது உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
புலிகளைத் தொடர்ந்து இக்கட்டான நிலையை ஏற்படுத்த விழைகின்றோம் என்ற உங்கள் அடுத்த கூற்று நகைப்புக்குரியது. வட கிழக்கில் எமக்கான உரித்துக்களை நாம் முன் வைத்தால் உடனே ப%

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12031

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.