«

»

இலங்கைக்கு உதவ அவுஸ்திரேலிய அரசாங்கமும் யுனிசெவ் மற்றும் உலகஉணவு திட்டமும் ஒப்பந்தம்

unicef-025.730x0
இலங்கையின் இயற்கை அனர்த்த தயார் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவ அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் முன்வந்துள்ளன.
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளும் விடயத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமும் யுனிசெவ் மற்றும் உலகஉணவு திட்டமும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஐ.நா. அமைப்புகளும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையின் திறனை வலுப்படுத்துவதற்கான மூன்று வருட திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளன.
இந்த திட்டத்திற்கு 750,000 அவுஸ்திரேலிய டொலர்களை செலவிடுவதற்கு அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் இணங்கியுள்ளன.
2004 ஆண்டு சுனாமி இலங்கையை தாக்கியதிலிருந்து அவுஸ்திரேலியா இலங்கையின் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் அவசரநிலை நடவடிக்கைகளிற்காக உதவி வருகின்றது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் விக்டோரியா கோக்லே தெரிவித்துள்ளார்.
இலங்கை இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காகவும்,துரித நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்வதற்காகவும் ஐ.நா.வின் இரு அமைப்புகளுடன் இணைந்து திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, மட்டக்களப்பு, இரத்தினபுரி, காலி உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் மாவட்டங்களை இலக்குவைத்தே இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர நிலையை எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்வதிலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடிய திறனை வலுப்படுத்துவதிலும் முதலீடு செய்யவேண்டியது அவசியம் என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான பிரதி இயக்குநர் நகுயென் டக் ஹோங் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களின் போது 25000 பேரிற்கு இந்த திட்டத்தின் கீழ் யுனிசெவ்வும் உலக உணவு திட்டமும் உதவிகளை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் முதியவர்களே இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் யுனிசெவ் ஆற்றும் பணிகளில் சிறுவர்களிற்கே மிக முக்கிய இடத்தை வழங்குகின்றோம் என அந்த அமைப்பின் பிரதிநிதி டிம் சட்டன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12061

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.