«

»

” சட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்”

STOP
ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச பிரிவுக்குட்பட்ட பெரியகளப்பை போலி ஆவணங்களை தயாரித்து அத்துமீறி நில அபகரிப்பு இடம் பெறுகின்றது. இது தொடர்பாக சம்பந்தபட்ட அரச அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என இந்து சம்மேளனத்தின் தலைவர் அருன்காந்த் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பெரியகளப்பை அண்டிய பகுதியைச் சேர்ந்த 4 ஆயிரம் குடும்பங்கள் ஜீவனோபயமாக நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலையடிவேம்பு சின்முகத்துவாரம் களப்பை தங்களது நிலம் என சில முஸ்லிம்களும் தமிழர்களும் போலி ஆவணங்கள் தயாரித்து ஆத்துமீறி வேலி அமைத்து நிலத்தை அபகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தை பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை அவர்களால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமையானது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி மத்திய சுற்றாடல் அமைச்சுக்கு இந்து சம்மேளனம் அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12074

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.