«

»

2025 இல் கதிரை கிடைக்கும் என கனவுகண்டு 20 ஐ எதிர்க்கும் சம்பிக்க!

champika-640x400
மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்துள்ள 20ஆவது அரசியலமைப்புச் திருத்தச்சட்டத்தை, அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்ப்பதற்கு புதிய காரணத்தை புரவெசி பலய அமைப்பு வெளியிட்டுள்ளது.
சம்பிக்க, நாட்டின் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வதற்கு கனவு கண்டுக்கொண்டிருப்பதே இதற்கு காரணம் என என குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியன்கொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டில் நாட்டின் ஜனாதிபதியாக முடியும் என்ற எண்ணத்தில் சம்பிக்க செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத சம்பிக்கவை ஒரு சர்வாதிகார ஆதரவாளராகவே நாம் நோக்க வேண்டி இருப்பதாக விமர்சித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, அவர் சர்வாதிகாரியாவதற்கே கனவு கண்டுக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்துள்ள 20ஆவது அரசியலமைப்புச் திருத்தச்சட்டம் குறித்த பிரேரணை நாட்டின் ஸ்திரமற்ற நிலைமைக்கு காரணமாக அமையலாம் எனவும், அது நாட்டிற்கு பொருத்தமற்றது என்றும் சம்பிக்க தெரிவித்திருந்தை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12126

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.