«

»

தனி அரசாங்கத்தை அமைக்குமா சுதந்திரக்கட்சி ?

z_p05-PURSUING
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனி அரசாங்கத்தை அமைக்கும் உறுதியான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக்குழு ஒன்றரை மாதமே செயற்படும். அதன் பின்னர் முழுமையான மறுசீரமைப்பினை செய்வேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு, அகில இலங்கை செயற்குழு மற்றும் நிறைவேற்றுக்குழு ஆகிய மூன்றும் ஒரே தடவையில் நேற்று(03-06-2018) கூடியது. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் தேசிய அரசாங்கத்தின் பயணம் குறித்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறி உறுதியான அரசியல் பயணம் ஒன்றினை முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும்,அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் ஆதரவு குறித்து இன்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்கொண்ட பின்னடைவானது எம்மை தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற வகையிலான மக்களின் ஆணையாகவே கருத வேண்டியுள்ளது. ஆகவே அதற்கான தீர்மானங்களை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது சகல காரணிகளையும் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதில் சகல தரப்பினரதும் ஒத்துழைப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12152

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.