«

»

அடுத்த ஜனாதிபதி நானாகவும் இருக்கலாம் : குட்டையை குழப்பி குண்டு போடும் மகிந்த!

mahi
ஸ்ரீலங்கா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நானாகவும் இருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே களமிறக்கப்படுவார் என பரவலாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் குறித்த சிங்கள ஊடகம் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த மஹிந்த,
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை பொதுஜன பெரமுனவும், கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து ஒரு முடிவை எடுக்கும். இதற்கு அவசரப்படத் தேவையில்லை.
ராஜபக்ஸ சகோதரர்களுக்கு இடையே எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு அவசரப்படுபவர்களே இவ்வாறான பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். ஆனால் எமக்குள் எந்த சண்டைகளும் இல்லை.
நான் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும் என சில சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது பற்றி உயர் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.
அந்த வகையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நானே போட்டியிடலாம் என்று மஹிந்த தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அண்மைக்காலமாக நல்லாட்சி அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதியின் உரை மூலம் நோக்கக்கூடியதாக உள்ளது.
100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தால் அரசியல் மட்டத்தில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
அதிலும், முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதியும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறான நிலையில் ரணில் விக்ரமசிங்க, தனது கட்சி உறுப்பினர்களுக்கு கொடுத்த உத்தரவும், ரணிலின் தற்போதைய நிலையையும் வைத்து பார்க்கும் போது ரணில் தரப்பு மிகவும் பலவீனமடைந்து இருப்பதாகவே தெரிகின்றது.
இந்த நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த உத்தேசித்துள்ள விடயம் தற்போது குழம்பியிருககும் அரசியல் சூழ்நிலையில் குண்டு போட்டதற்கு சமமாக உள்ளதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12163

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.