«

மைத்திரி ,ரணில் மோதலா?

RANIL-MAITHRIPALA-
ஸ்ரீலங்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்குச் சொந்தமான TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, ஜனாதிபதி மைத்திரிபால கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று மூடியுள்ளனர். (maithripala sirisena suddenly met UNP SLFP members)
இந்த சம்பவம் தெற்கு அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அரசாங்கம் ஆட்சியமைக்கப்பட்டு 100 வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்து குறித்த தொலைக்காட்சியில் ஒரு செய்தி அறிக்கையை ஒளிபரப்பியதால் கோபுரம் சீல் வைத்து முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர், உரிமக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறியே பொல்கஹவெலவில் உள்ள TNL தொலைக்காட்சியின் அலைவரிசை பரிமாற்ற மையத்தை, தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மூடியதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அண்மைய பனிப்போரின் உச்சக்கட்டமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் இருப்பதால் ஜனாதிபதி மைத்திரயின் பணிப்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் நேற்று பாராளுமன்ற அமர்வின் போதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை திடீரென சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இரகியமாக இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் தமது அதிருப்பதியை வெளியிட்டு இருந்ததோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரியின் கருத்துக்களுக்கு கட்சியின் உறுப்பினர்களும் யாரும் பதிலளிக்க போக வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.
ரணில் – மைத்திரி மோதல் மஹிந்த அணியினருக்கு மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே ஜனாதிபதி நேற்றிரவு இரு கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து இரகியமாக கலந்துரையாடி உள்ளார்.
அரசாங்கத்துக்குள் நிலவும் பிரச்சினைகளை தெளிவுபடுத்திக்கொள்வது இச்சந்திப்பின் நோக்கமாகும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12172

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.