«

»

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுமந்திரன் எம்.பி.விஜயம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை விஜயம் ஒன்றை மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் வைத்தியசாலையின் நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திசெய்ய நடவடிக்கையெடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம் உட்பட்ட வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள்,வைத்திய சங்க பிரதிநிதிகள்,தாதியர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக அண்மைக்காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாப்பட்டது.

குறிப்பாக வைத்தியர்களின் பற்றாக்குi மற்றும் திண்மக்கழிவுகளை அகற்றுவதில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கையெடுக்கும்போது அரச வைத்தியஅதிகாரிகள் சங்கம் அதற்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பிலும் இங்கு விசனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது

 

IMG_7192 IMG_7204

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12201

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.