«

»

மீண்டும் அசத்துமா சென்னை? ராஜஸ்தானுடன் இன்று மோதல்!

சென்னையில் இன்று நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.
சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி நல்ல தொடக்கம் தருகிறார். ஆனால், முரளி விஜய் திணறுவது கவலை அளிக்கிறது. நடுவரிசையில் ரெய்னா, பத்ரிநாத் கைகொடுக்க வேண்டும்.

கடைசி கட்டத்தில் அணித்தலைவர் டோனி, டுவைன் பிராவோ ஆகியோர் அசத்துவார்கள் என்று நம்பலாம். கடந்த போட்டியில் சகலதுறை அசத்திய ரவிந்திர ஜடேஜா மீண்டும் மிரட்டலாம்.

சென்னையில் இன்று நடக்கும் பிறீமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.

பந்துவீச்சில் புதிய நாயகனாக மோகித் சர்மா ஜொலிக்கிறார். இவருடன் சேர்ந்து வேகத்தில் ஆல்பி மார்கல், கிறிஸ் மோரிஸ் அசத்தலாம். சொந்த மண்ணில் அஷ்வின் சுழல் ஜாலம் காட்டுவது உறுதி. இவருக்கு ஜடேஜா பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் தொடக்க வீரர் ரஹானே சிறப்பாக செயல்பட்டாலும், கடந்த போட்டியில் கோட்டைவிட்டார். இவர் இன்று எழுச்சி காண்பது அவசியம். இவருக்கு வாட்சன் கைகொடுத்தால் அதிக ஓட்டங்கள் சேர்க்க முயற்சிக்கலாம்.

நடுவரிசையில் அணித்தலைவர் டிராவிட், பின்னி ஆகியோர் ஓரளவு கைகொடுக்கின்றனர். ஹாட்ஜ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

பந்துவீச்சில் ஸ்ரீசாந்த் விக்கெட் கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். வாட்சன் பந்துவீச்சிலும் கைகொடுப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. இவர்களுடன் சண்டிலா, பால்க்னர், திரிவேதி அசத்தும் பட்சத்தில் சென்னை அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

பிறீமியர் கிரிக்கெட் அரங்கில் இரு அணிகளும் 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை 7, ராஜஸ்தான் 4ல் வெற்றி பெற்றுள்ளன.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1312

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.