«

»

15 இன் கீழ் பிரிமா கிண்ண கிரிக்கட் யாழ்., கிளி­நொச்சி வீரர்கள் பிர­கா­சிப்பு!

090720124092-295x180இலங்கை கிரிக்கட் நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­படும் 15 வயதின் கீழ் பிரிமா கிண்­ணத்­திற்­கான மாவட்ட மட்டப் போட்­டி­களில் யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்சி வீரர்கள் துடுப்­பாட்­டத்­திலும் பந்­து­வீச்­சிலும் பிர­கா­சித்­துள்­ளனர்.
வட மாகா­ணத்தில் நான்கு மாவட்­டங்கள் முதலாம் சுற்றில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தன. முதல் சுற்றில் யாழ். மாவட்டம் தனது 3 போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்­ற­துடன் கிளி­நொச்சி மாவட்டம் 2 போட்­டி­க­ளிலும் மன்னார் மாவட்டம் ஒரு போட்­டி­யிலும் வெற்­றி­ பெற்­றி­ருந்­தன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் போதிய பாட­சா­லைகள் கிரிக்கட் விளை­யாட்டில் ஈடு­ப­டா­ததன் கார­ண­மாக வீரர்­களைத் தெரிவு செய்வதில் சிக்கல் நில­வி­ய­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. எனினும் இறு­தியில் அம் மாவட்டம் சார்­பாக கலந்­து­கொண்ட இளம் வீரர்கள் வெற்­றி­பெ­று­வ­தல்ல; பங்­கு­பற்­று­வதே சிறந்­தது என்­பதை உணர்த்­தினர்.
இந்த நான்கு அணி­க­ளிலும் இடம்­பெற்­ற­வர்­களில் அதி­சி­றந்­த­வர்­களை உள்­ள­டக்­கிய மாகாண அணியைத் தெரிவு செய்யும் பணிகள் நாளை­ ம­று­தினம் நடை­பெறும். இந்த அணியே பிரிமா கிண்ண கிரிக்கட் போட்­டி­களில் வட மாகாணம் சார்­பாக விளை­யா­ட­வுள்­ளது.

மாகாண கிரிக்கட் பயிற்­றுநர் ரவீந்த்ர புஷ்­ப­கு­மார தேசிய கனிஷ்ட கிரிக்கட் அணித் தெரி­வாளர் அம­லதாஸ் செரேனஸ் நிஷாந்தன், மாவட்­டங்­களின் கிரிக்கட் பயிற்­று­நர்கள் ஆகியோர் இணைந்து மாகாண அணியைத் தெரிவு செய­வுள்­ளனர்.

இவ் வருடம் வட மாகா­ணத்தில் நடத்­தப்­பட்ட பிரிமா மாவட்ட மட்டப் போட்­டி­களில் மூன்று வீரர்கள் துடுப்­பாட்­டத்­திலும் பந்­து­வீச்­சிலும் தங்­க­ளது திற­மை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.
அந்த மூவரில் கிளி­நொச்சி மாவட்டம் சார்­பாக விளை­யா­டிய கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயிலும் ஜே. மிதுஷன் பந்து வீச்சில் பிர­கா­சித்து பல­ரையும் கவர்ந்தார்.

போதிய வசதி, வாய்ப்­புகள் இல்­லாத நிலை­யிலும் இவர் 3 போட்­டி­களில் விளை­யாடி 24 ஓவர்கள் பந்­து­வீசி 90 ஓட்­டங்­க­ளுக்கு 10 விக்­கட்­களைக் கைப்­பற்றி பலத்த பாராட்டைப் பெற்றார். இவர் முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு எதி­ரான போட்­டியில் 31 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கட்­களைக் கைப்­பற்றி தனது அதி சிறந்த பந்­து­வீச்சுப் பெறு­தியைப் பதிவு செய்தார்.

இவ­ருக்கு உரிய பயிற்­சிகள் அளிக்­கப்­ப­டு­மாயின் சிறந்த முன்­னேற்­றத்தை அடைவார் என பலரும் கரு­து­கின்­றனர்.
இப் போட்­டி­களில் யாழ்ப்­பாணம் சென்ற் ஜோன்ஸ் கல்­லூ­ரியின் கே. கபில்­ராஜும் பந்­து­வீச்சில் சிறந்த ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். மன்னார் மாவட்­டத்­திற்கு எதி­ரான போட்­டியில் 9 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கட்கள் என்ற அதி சிறந்த பெறு­தி­யுடன் 3 போட்­டி­களில் 27 ஓட்­டங்­க­ளுக்கு 10 விக்­கட்­களைக் கைப்­பற்­றி­யி­ருந்தார்.
இவர்­களை விட யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூ­ரியின் சி. டானியல் 3 போட்­டி­களில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் அடங்­க­லாக மொத்­த­மாக 155 ஓட்­டங்­களைக் குவித்தார். மன்னார் மாவட்­டத்­திற்கு எதி­ராக 103 ஓட்­டங்­களைப் பெற்ற இவர் மாத்­தி­ரமே வட மாகாண மாவட்டப் போட்­டி­களில் சதம் குவித்­தி­ருந்­தவர் ஆவார்.
போட்டி முடி­வுகள்:

கிளி­நொச்சி 41.1 ஓவர்­களில் 111/10; யாழ்ப்­பாணம் 15.2 ஓ. 112/3. 7 விக்­கட்­களால் யாழ். மாவட்டம் வெற்றி.
முல்­லைத்­தீவு 35.1 ஓ. 91/10; மன்னார் 17 ஓவர்­களில் 97/5. மன்னார் 5 விக்­கட்­களால் வெற்றி.
யாழ்ப்­பாணம் 50 ஓ. 252/7; மன்னார் 10.5 ஓ. 26/10. யாழ்ப்­பாணம் 226 ஓட்­டங்­களால் வெற்றி.
முல்லைத்தீவு 21.4 ஓ. 99/10; கிளிநொச்சி 18.5 ஓ. 100/1. கிளிநொச்சி 9 விக்கட்களால் வெற்றி.
முல்லைத்தீவு 23.3 ஓ. 54/10; யாழ்ப்பாணம் 8.3 ஓ. 55/1. யாழ்ப்பாணம் 9 விக்கட்களால் வெற்றி.
கிளிநொச்சி 40 ஓ. 179/10; மன்னார்
43.5 ஓ. 139/10. கிளிநொச்சி 40 ஓட்டங்களால் வெற்றி.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1651

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.