«

»

பாற்காரன் குறும்படம் உத்தியோகபூர்வமாக இணையத்தில் வெளியீடு!

3333கடந்த மாதம் யாழ் ராஜா திரையரங்கை நிறைத்த வெளியீடான நெடுந்தீவு முகிலனின் 6ஆவது குறும்படமான பாற்காரன் இன்று உத்தியோகபூர்வமாக படக்குழுவினரால் இணையதள வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றது.

யாழின் தற்போதைய பால்மா பிரச்சனையை மையக்கருவாக கொண்டு, வீண்விரையமாகும் விடயங்களுக்கு குறியீடாக பசுப்பாலினை உள்வாங்கி எல்லோர் மனங்களிலும் ஆணியடித்ததுபோல் இடம்பிடித்த பாற்காரன் குறும்படம் இணைய நண்பர்களுக்காக இன்று வெளியிடப்படுகின்றது

இந்தப்படத்தின் கதாநாயகனாக பேராசிரியர் சிவச்சந்திரனின் மகன் பாரதி தனது பாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்தி இருக்கின்றார், படத்தின் உயிர்நாடியாக படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேன் யாழ்ப்பாணத்தின் அழகை மிக தத்துரூபமாக காண்பித்துள்ளார், படத்தினை மீண்டும் மீண்டும் பார்கும் வகையில் அற்புதனின் இசை அமைந்துள்ளது, ஏனைய நடிகர்களும் தமது திறமைகளை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர், கதையையும் கருவையும் நெடுந்தீவு முகிலன் நன்று தேர்ந்தெடுத்துள்ளார், இப்படைப்பை தயாரித்த கேதீசை பாராட்டவேண்டும்

ஈழத்தில் இருந்து நவீன திரைநுணுக்கங்களுடன் வெளிவந்த குறும்படமான பாற்காரன் இணைய வாசகர்களையும் நன்கு திருப்திப்திபடுத்தும் என்பதுஆணித்தரமான உண்மை,

பாற்காரன் குறும்படம் பால் பிரச்சனையை மட்டும் அல்லாமல் எமது ஈழ்ப்பிரச்சனையையும் நாசூக்காக தொட்டுச்செல்கின்றது,ஈழத்தில் இருந்துவரும் படைப்புகள் பாற்காரன் போன்று சமூக அக்கறையும் மனித
விழிப்புணர்வுடனும் வெளிவருவது எம் ஈழப்படைப்புகளை வெளிஉலகிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை,

வாழ்துக்கள் படக்குழுவினருக்கு.

3333

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2163

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.