«

»

பெங்களுரை சுருட்டி ராஜஸ்தான் எளிதில் வெற்றி!

watson-1ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் அணியும் பெங்களுர் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பெங்களுர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தக்வாலே ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து பார்த்திவ் பட்டேலும் ரன் அவுட்டானார்.பின்னர் அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. குறிப்பாக ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தாம்பேவின் சுழலில் பெங்களுர் வீரர்கள் திணறினர். அந்த அணியின் கேப்டன் கோலி மட்டும் 21 ரன்கள் எடுத்தார். முடிவில் அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 70 ரன்னில் சுருண்டது.

பிழன்னர் 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரகானே 23 ரன்னிலும் சஞ்சு சாம்சன் 2ரன்னிலும் நாயர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் வாட்சன் எடுத்த 24 ரன்களால் 13 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2346

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.