«

»

வீழ்ந்தது கொல்கத்தா: மீண்டும் பஞ்சாப் அபார வெற்றி !

kxip_kkr_008கொல்கத்தா அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றது. 

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவரும் 7வது ஐ.பி.எல் தொடரின் 15வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.

அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன் படி பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் எடுத்தது.

ஷேவாக் 37 ஓட்டங்களும், ரிஷி தவான் 19 ஓட்டங்களும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 15 ஓட்டங்களும் எடுத்தனர்.

கொல்கத்தா சார்பில் சுனில் நரைன், பியூஸ் சாவ்லா இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பஞ்சாப்-கொல்கத்தா போட்டி காணொளி

இதனையடுத்து 133 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 18.2 ஓவரில் 109 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 34 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் பஞ்சாப் சார்பில் மிட்சல் ஜான்சன், அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  3 விக்கெட் வீழ்த்திய சந்தீப் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

kxip_kkr_008

kxip_kkr_002

kxip_kkr_004

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2350

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.