«

»

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்!

IPL2014-holder-featuredடெல்லி டேர்டெவில்ஸ்–மும்பை இந்தியன்ஸ்

இடம்: ஷார்ஜா, நேரம்: மாலை 4 மணி

கேப்டன்கள்: கெவின் பீட்டர்சன்/ரோகித் ஷர்மா

நட்சத்திர வீரர்கள்: மயங்க் அகர்வால், நாதன் கவுல்டர் நிலே, குயின்டன் டீ காக், டுமினி, ஜெய்தேவ் உனட்கட்/கோரி ஆண்டர்சன், மைக் ஹஸ்ஸி, பொல்லார்ட், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங்.

இதுவரை நேருக்கு நேர்: 12 டெல்லி வெற்றி–6, மும்பை வெற்றி–6

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த தனது 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வி (கொல்கத்தா, பெங்களூர், சென்னை அணிகளுக்கு எதிராக) கண்டு வெற்றிக்கணக்கை தொடங்காமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வி கண்டது. 2–வது ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. 3–வது மற்றும் 4–வது லீக் ஆட்டங்களிலும் (சென்னை, ஐதராபாத் அணிக்கு எதிராக) தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் 7–வது இடத்தில் உள்ளது. முதல் 3 ஆட்டங்களில் காயம் காரணமாக விளையாடாத டெல்லி அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் கடந்த ஆட்டத்தில் களம் கண்டாலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சோபிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் எம்.விஜய், டீ காக் ஆகியோர் ஆட்டம் சிறப்பாக இருந்தது. மிடில் ஆர்டரில் கெவின் பீட்டர்சன், டுமினி ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியமாகும். ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியினர் 184 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தனர். இதனால் டெல்லி அணியின் பந்து வீச்சு முன்னேற்றம் காண வேண்டியது இன்றியமையாததாகும். டெல்லி அணியின் பந்து வீச்சு பலம் அடைந்தால் மட்டுமே, முதல் வெற்றியை ருசிக்க மும்முரம் காட்டும் மும்பை இந்தியன் அணிக்கு முஸ்திப்பை காட்ட முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ்

இடம்: ஷார்ஜா, நேரம்: இரவு 8 மணி

கேப்டன்கள்: டோனி, ஷிகர்தவான்

நட்சத்திர வீரர்கள்: பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித், சுரேஷ்ரெய்னா, டுபிளிஸ்சிஸ், ரவீந்திர ஜடேஜா/ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டெயின், டேரன் சேமி, அமித்மிஸ்ரா.

இதுவரை நேருக்கு நேர்: 2 சென்னை வெற்றி–2, ஐதராபாத் வெற்றி–0

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் முறையே ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளிடம் தோல்வி கண்டு மோசமான தொடக்கத்தை சந்தித்தது. 3–வது லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரில் 4 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி புதிய நம்பிக்கையை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் (88 ரன்கள்)– டேவிட் வார்னர் (58 ரன்கள்) ஜோடி 2–வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 128 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர்தவான், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் லோகேஷ் ராகுல், வேணுகோபால் ராவ் ஆகியோர் இதுவரை ஜொலிக்கவில்லை. ஸ்டெயின், புவனேஷ்வர்குமார் ஆகியோர் அடங்கிய அந்த அணியின் பந்து வீச்சு மெச்சும் படியாகவே உள்ளது.

2 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியுடன் தான் இந்த ஆண்டு போட்டியை தொடங்கியது. ஆனால் அடுத்தடுத்த 3 லீக் ஆட்டங்களில் (டெல்லி, ராஜஸ்தான், மும்பை அணிகளுக்கு எதிராக) தொடர்ச்சியாக வெற்றி கண்டு வலுவாக விசுவரூபம் எடுத்து வருகிறது. வலுவான சென்னை அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி காண்பது என்பது கடும் சவாலான விஷயம் என்றால் மிகையாகாது.

––

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2355

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.