«

»

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வி!

Delhi2704201401நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த தனது 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வி (கொல்கத்தா, பெங்களூர், சென்னை அணிகளுக்கு எதிராக) கண்டு வெற்றிக்கணக்கை தொடங்காமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஷார்ஜாவில் நடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து விளையாடியது. மும்பை அணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 125 ரன்கள் அடித்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்று ராஜஸ்தான் அணிக்கு இலக்கு நிர்ணயம் செய்தது. அணியில் பொல்லார்ட் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 126 ரன்கள் எடுத்து மும்பை இலங்கை தகர்த்தது. அணியில் அதிகப்பட்சமாக முரளி விஜய் 40 ரன்கள் எடுத்தார். மும்பை வீரர் மலிங்கா 2 விக்கெட்களை கைப்பற்றினார். ஆண்டர்சன், சர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2358

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.