«

»

பஞ்சாப் – பெங்களூர் இன்று பலப்பரீட்சை!

kxip_kkr_004ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது 4 ஆட்டங்களிலும் (சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா) தொடர்ந்து வெற்றி கண்டு தோல்வியை சந்திக்காத அணியாக விளங்கி வருகிறது.

கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் ஆகியோர் ஏமாற்றம் அளித்தாலும், ஷேவாக் நிலைத்து ஆடி பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

அத்துடன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் ஜான்சன், சந்தீப் ஷர்மா, எல்.பாலாஜி அக்ஷர் பட்டேல் ஆகியோரின் பந்து வீச்சு எதிரணியை நிலைகுலைய வைக்கும் வகையில் இருக்கிறது.

பெங்களூர் அணி இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி (டெல்லி, மும்பை ), 2 தோல்வி (கொல்கத்தா, ராஜஸ்தான் ) கண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி 2 ஆட்டங்களிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பெங்களூர் அணி 70 ஓட்டங்களில் சுருண்டு, ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் 3வது குறைந்தபட்ச ஓட்டங்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை பெற்றது.

அந்த ஆட்டத்தில் அணித்தலைவர் விராட்கோஹ்லி தவிர யாரும் துடுப்பாட்டத்தில் ஜொலிக்கவில்லை. முதுகு வலி காரணமாக இதுவரை களம் காணாத அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் இன்றைய ஆட்டத்திலும் விளையாடுவாரா? என்பது தெரியவில்லை. அவர் ஆடினால் பெங்களூர் அணி ஏற்றம் பெறும்.

ஆதிக்கம் செலுத்தி வரும் பஞ்சாப் அணியின் வெற்றிப்பயணத்துக்கு பெங்களூர் அணி முட்டுக்கட்டை போடுமா? என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2391

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.