«

»

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை வென்றது சென்னை!

110ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது.

ராஞ்சியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது.

மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ஸ்மித்தும்,மெக்கல்லமும் அதிரடியாக விளையாடினர்.

ஸ்மித் 11 பந்துகளில் 16 ரன்களும் மெக்கல்லம் 40 பந்துகளில் 56 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 31 ரன்களும் தோனி 22 ரன்களும் ரவீந்தர ஜடஜா 17 ரன்களும் எடுத்தனர். 17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 148 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா 47 ரன்களும் யூசப் பதான் 41 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.

கம்பிர் உள்ளிட்ட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து ஏமாற்றமளித்தனர்.

இதனால் 17 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 114 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

கேப்டன் தோனியின் சொந்த ஊரில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து ராஞ்சியில் அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2595

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.