«

»

ஐ.பி.எல்- சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

download (33)டில்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயித்த 179 ரன்கள் என்ற வெற்றி இலக்கை தொடக்க வீரர் டுவைன் ஸ்மித்தின் பலமான ஆரம்பத்துடன் அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுக்களால் தொடரில் 6 வது வெற்றியை பதிவு செய்தது.

சொந்த மண்ணில் வெற்றிக்காக இறுதிவரை போராடிய டில்லி அணி தொடரில் 5 வது தோல்வியை சந்தித்துள்ளது. 7 வது ஐ.பி.எல். தொடரின் 26 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டில்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் மோதின.

டில்லியில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை பீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் ஆடிய டில்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்களைப்பெற்றது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி குக் (24), முரளி விஜய் (35) ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை அமைக்க அரைச்சதம் அடித்த தினேஷ் கார்த்திக் (51), டுமினி (28), ஜாதவ் (29) ஆகியோர் அணியின் ரன் எண்ணிக்கையை திடப்படுத்தினர்.

அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் ரன் எதனையும் பெறாது மோகித் சர்மாவின் பந்து வீச்சில் போல்டாகி ஏமாற்றமளித்தார். இதனையடுத்து 179 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 181 ரன்களைப்பெற்று வெற்றியை தனதாக்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய டுவைன் ஸ்மித் (79), பிரண்டன் மெக்குலம் (32) ஆகியோர் இணைப்பாட்டமாக 82 ரன்களைப்பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க ஜோடி சேர்ந்த ரெய்னா (47), அணித்தலைவர் தோனி (12) ஆகியோர் ஆட்டமிழப்பின்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2747

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.