«

»

33வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!

csk_mi_004-300x273மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7வது ஐ.பி.எல் தொடரின் 33வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது, இதனையடுத்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்த மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சிம்மன்ஸ்- கௌதம் களமிறங்கினர்.

கௌதம் 9வது ஓட்டத்தில் ஆட்டமிழந்ததையடுத்து, சிம்மன்சுடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். அணியின் ஸ்கோர் 77 ஆக இருக்கும்போது சிம்மன்ஸ் 38 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து ராயுடுவுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். ராயுடு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். ரோகித் சர்மா 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதில், சிறப்பாக விளையாடிய ராயுடு 59 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் வந்த கோரி ஆன்டர்சன் 6 பந்தில் 18 ஓட்டங்கள் எடுக்க மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. பந்துவீச்சில் சென்னை சார்பில் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 158 என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டுவைன் ஸ்மித் அரைசதம் கடந்து 57 ஓட்டங்களும், பிளசிஸ் 31 ஓட்டங்களும், அணித்தலைவர் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் மும்பை சார்பில் பிரவீன் குமார், மலிங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2959

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.