«

»

‘கோச்சடையான்’ 23ஆம் தேதி திரைக்கு வரும்: தயாரிப்பு நிறுவனம் உறுதி!

Kochadaiyaan 200சென்னை: ‘‘கோச்சடையான் படம் வருகிற 23ஆம் தேதி உறுதியாக திரைக்கு வரும். வதந்திகளை நம்ப வேண்டாம்’’ என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்து, அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்துள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்பு சில தொழிற்நுட்ப காரணங்களுக்காக 23ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கோடி சிக்கலில் கோச்சடையான் படம் சிக்கியுள்ளதாகவும், அந்த படம் 23ஆம் தேதி திரைக்கு வராது எனவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கோச்சடையான் படம் திரைக்கு வருவது குறித்து அப்படத்தை தயாரித்துள்ள மீடியா ஒன் நிறுவனம்  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ரஜினிகாந்த்–தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, போஜ்புரி, மராட்டி என 6 மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 6 மொழிகளில் வெளியிடப்படும் முதல் படம் இதுதான்.

இந்த படம், கடந்த 9ஆம் தேதி வெளியாக இருந்தது. சில தொழில்நுட்ப காரணங்களால் படம் திரைக்கு வருவதை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் சில உண்மையற்ற செய்திகள் வெளிவந்திருப்பதாக அறிகிறோம்.

கோச்சடையான் படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி, ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு விட்டது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டு விட்டது.

3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை. தற்போது கோச்சடையான் படம் வெளியாக தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி, கோச்சடையான் படம் மே 23ஆம் தேதி உறுதியாக வெளியாகும். எனவே, வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” எனக் கூறப்பட்டுள்ளது.

Kochadaiyaan 200

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3125

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.