«

»

பிரித்­தா­னி­யாவில் திரு­ம­ணத்தில் இடம்­பெற்ற வாணவெடி அனர்த்­தத்தால் இருவர் உயி­ரி­ழப்பு!

 

vanavadiசெல்­வந்த பிர­முகர் ஒரு­வ­ரது திரு­ம­ணத்தில் இடம்­பெற்ற வாணவெடி அனர்த்­தத்தால் இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் பலர் காய­ம­டைந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை கும்­பி­றி­யாவில் வின்­டா­மியர் எனும் இடத்தில் இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து பிரித்­தா­னிய ஊட­கங்கள் திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

காப்­பு­று­தித்­துறை நிறு­வ­ன­மொன்றின் தலை­வ­ரான ஜோன் சிம்ஸன் (61 வயது) மற்றும் அவ­ரது காத­லி­யான நிகோலி ரொத்வெல் (44 வயது) ஆகி­யோரின் திரு­மண வைபவத்­தி­லேயே இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.

மண­ம­கனும் மண­ம­களும் திரு­மண பந்­தத்தில் இணைந்த பின்னர் புகைப்­ப­டங்­க­ளுக்­காக கட்­சி­ய­ளித்துக் கொண்­டி­ருந்த வேளை அந்த வைப­வத்தின் போது வெடிப்­ப­தற்­காக களஞ்­சி­ய­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த வாணவெடிகள் வெடித்­ததால் திரு­மணம் நடை­பெற்ற கூடா­ரமே தீப் பற்றி எரிந்­துள்­ளது.

திரு­ம­ணத்­தை­ய­டுத்து திரு­மண விருந்­து­ப­ர­சா­ரத்தில் பங்­கேற்க காத்­தி­ருந்த சுமார் 70 விருந்­தி­னர்கள் தமது உயிரை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஆணொருவரும் பெண் ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3811

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.