«

»

அமொிக்காவில் தமிழ் படிக்கும் அமொிக்கா்கள்,பனை நிலம் தமிழ்ச் சங்கத்தின் முயற்சி!

unnamed-5-580x384சார்ல்ஸ்டன்(யு.எஸ்): தமிழ் மொழியை அமெரிக்கர்களுக்கும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் சார்ல்ஸ்டன் பனை நிலம் தமிழ்ச் சங்கத்தினர் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

தமிழ் வரலாற்றில் மிக முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் உட்பட இந்தியர்களுக்கு தாய் மொழியும், ஆங்கிலமும் தெரிந்திருக்கும். அதே போல் பெரும்பாலான லத்தீன் இனத்தவர்கள் ஸ்பானிஷும் ஆங்கிலமும் அறிந்திருப்பார்கள். சீனர்களுக்கு சீன மொழியும் ஆங்கிலமும் தெரியும்.

ஆனால் அமெரிக்கர்களை ஒற்றை மொழியினர் (uniligual) என்று பரவலாக அழைப்பதுண்டு. அதாவது அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும் (மொழியின் பெயரால் அங்கு சண்டை கிடையாது!).

சமீப காலமாக பெரும்பாலான பள்ளிகளில் இரட்டை மொழி என்ற அடிப்படையில் ஸ்பானிஷ் மொழியும் கற்றுத் தரப்படுகிறது. தவிர தனிப்பட்ட முறையில் கற்று வரும் குழந்தைகளுக்கு சீன, ஃப்ரெஞ்சு மொழி உட்பட வேறு மொழிகளுக்கும், பள்ளியில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் மொழிக்கு இப்படிப்பட்ட மதிப்பெண்கள் பெறுவதற்கு, தமிழ்ப் பள்ளிகளும், அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகமும் முயற்சிகள் எடுத்து வருகின்றன

unnamed-5-580x384

தமிழ் மொழியும் கற்றால் என்ன?

இந் நிலையில் உலகிலேயே தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை, அமெரிக்கர்களுக்கும் கற்றுக் கொடுத்தால் என்ன? என்ற சிந்தனையில் பனை நிலம் தமிழ்ச் சங்கத்தினர், முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அதாவது, தமிழ்க் குழந்தைகள் தவிர, தமிழ் பேசும் அமெரிக்கர்களையும் உருவாக்க வேண்டும் என்பது தான் இதன் அடிப்படை நோக்கமாகும்

ஒற்றை மொழி அமெரிக்கர்கள் (Uniligual Americans) என்பதை தற்கால அமெர்க்கக் குழந்தைகள் விரும்புவதில்லை. கூடுதலாக ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இதில் ஸ்பானிஷ் அல்லது சீன மொழிகள் தான் அவர்களுடைய முதல் தேர்வாக இருக்கிறது. தமிழ் மொழி குறித்து இவர்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. எனவே அமெரிக்க பள்ளிக்குழந்தைகளுக்கு தமிழ் மொழி, அதன் தொன்மையான சிறப்புகள் மற்றும் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றியும் எடுத்துரைக்கும் முயற்சியை பனை நிலம் தமிழ் சங்கம் முன்னெடுத்துள்ளது. கூடவே கோலம் வரையவும், கும்மிப் பாடல்கள் பாடவும், வண்ணங்கள் பூசவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

unnamed-8-580x384

250 அமெரிக்க மாணவர்கள் – வேட்டி சட்டையில் ஆசிரியர்

ஆக்லே ஆல் பள்ளி மற்றும் பியூஸ்ட் அகாடமி மாணவ மாணவியர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் பண்பாடு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பனை நிலம் தமிழ்ச் சங்கத்தின் ஹரி  நாராயணன் இந்த பாடங்களை நடத்தினார்.

நிகழ்ச்சியில் 250 அமெரிக்க மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். திருவள்ளுவர், திருக்குறள், தஞ்சை பெரியகோவில் மற்றும் இட்லி தோசை உட்பட தமிழர்களின் பாரம்பரியத்தை பற்றிய விவரங்களை, சில மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொள்ளவும் செய்தார்கள். அத்தனை மாணவ மாணவியர்களுக்கு மத்தியில் ஹரி நாராயணன், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்து, வகுப்பெடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க குழந்தைகளை தமிழ்ப் பள்ளிக்கு அழைத்து தமிழ் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக சங்கத் தலைவர் சந்தோஷ் மணி தெரிவித்தார். ஏற்கனவே பரிட்சார்த்த முறையில் கடந்த ஆண்டு சில மாணவர்களை தமிழ்ப் பள்ளியில் சேர்த்துள்ளார்கள். தொடர்ந்து இதை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.

unnamed-7-580x384

தமிழ்ப் பிள்ளைகள் தமிழை மறந்தாலும்…

தலைவர் சந்தோஷ் மணி கூறுகையில், நம் மொழி பேசும் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டுமென்றால் வேற்று மொழியினருக்கும் நாம் தமிழ் கற்றுத் தரவேண்டும். இன்னொரு மொழி தேடும் ஆர்வமுள்ள அமெரிக்கக் குழந்தைகள் அதற்கு சரியானவர்கள். எழுதப் படித்து பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தமிழ் மொழி மென்மேலும் தழைத்தோங்கும்’ என்றார்.

ஒருவேளை தமிழ்நாட்டில் தமிழில் பேச மறுக்கும் காலம் வந்தால் கூட, அமெரிக்காவில் பரவலாக தமிழ் பேசும் காலம் வந்துவிடும் போலிருக்கே. தமிழ் நாட்டில் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசி அசத்தும் வேளையில், அமெரிக்கர்களின் குழந்தைகள் தமிழில் பேசக்கூடிய நாட்கள் வெகு அருகில் இருப்பதற்கான நம்பிக்கை பிறந்துவிட்டது!

unnamed-9-580x384

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3838

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.