«

»

யானைகளை துரத்தும் பொறி மட்டு.இளைஞனால் கண்டுபிடிப்பு!

elephant_pori_003மட்டக்களப்பு திருப்பெருந்துறையைச் சேர்ந்த சோமசூரியம் திருமாறன் என்பவர் காட்டு யானைகளைத் துரத்த பொறி ஒன்றைத் தயாரித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காட்டு யானைகளினால் மக்கள் அதிகளவில் உயிர் இழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

 

இவ்வாறு அதிகரித்துவரும் காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தப் பொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தன்னியக்கமாக பாரிய ஒலி, ஒளிகளை எழுப்பி யானைகளைத் துரத்தும் வகையில் மேற்படி பொறி தயாரிக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் மேற்படி பொறி மின்சாரம் இல்லாத இடத்திலும் பாவிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி பொறியை வன இலாக அதிகாரிகளின் உதவியுடன் சோதனை செய்த பின்னர் இதை அறிமுகப்படுத்த உள்ளதாக திருமாறன் தெரிவித்தார்.

இவருக்கு உதவியாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் 12ம் வருடத்தில் கல்வி கற்றுவரும் தோவேஸ்வரன் மிதுறாஸன் எனும் மாணவனும் துணைபுரிந்து வருகின்றார்.

திருமாறன், ஏற்கனவே நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் பொறி தயாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

elephant_pori_002

elephant_pori_001

elephant_pori_003elephant_pori_004

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3844

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.