«

»

லண்டனில் சட்டத்துறையில் சாதனை படைத்த வல்வெட்டித்துறை மாணவி!

yazini_lawவல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23வது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார்.

திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார்.

இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எடுத்து தனது முழு நேரத்தையும் சட்டத்துறையில் செலுத்தி தீவிரமாகப் படித்து சட்டத்துறையில் முதுகலைப் பட்டத்தையும் இளம் வயதிலேயே பெற்றிருக்கின்றார்.
 
பல்கலைப் படிப்பில் சட்டத்துறையை (law) யாரும் அதிகளவில் விரும்பிப்படிப்பதில்லை. காரணம் சுமைகள் கூடிய சிக்கலான துறை இதுவாகும். அதிக நேரத்தை செலவிட்டு அதிகம் படிக்கவேண்டும். ஆனால் செல்வி.யாழினி இந்தச் சுமைகள் கூடிய படிப்பை ஒரு தவமாக எண்ணி விரும்பிப் படித்திருந்தார்.
தனது நாட்களின் அதிகளவு நேரத்தை இந்த துறையில் செலவிட்ட யாழினி ஒரே தடவையில் படித்து முடித்துப் பட்டம் பெற்றது மட்டுமில்லாமல் மறு நாளே அவருக்கு லண்டனில் உள்ள பிரபல நீதிமன்றமான Croydon County Courtஇல் அரச சட்டத்தரணியாக பணியாற்றும் சேவையையும் பெற்றுள்ளார் என்பது இங்கு சிறப்புடன் கவனத்தில் கொள்ளத்தக்கது.
 
இங்கிலாந்து நாட்டில் தனது இளம் வயதில் சட்டத்தரணியாகியுள்ள செல்வி யாழினி வல்வெட்டித்துறைக்கும் இந்த வகையில் பெருமை சேர்த்துள்ளார்.செல்வி யாழினி வல்வை ஊரிக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த திரு அருட்பிரகாசம் சாந்தகுணநாயகி ஆகியோரின் பேர்த்தி ஆவார். மறைந்த திரு அருட்பிரகாசம் அவர்கள் ஒரு மிகச் சகலதுறை விளையாட்டு வீரர் என்பதும் இங்கு நினைவுபடுத்திக்கொள்ளத்தக்கது.

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3973

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.