«

»

வாழைச்சேனையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

IMG_மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பொத்தானைக்குளத்தில் இன்று புதன்கிழமை (08) நீராடிய எம்.அம்ராஸ் என்ற 08 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை எம்.பி.சி.எஸ்.வீதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், ஹஜ் பெருநாள் கொண்டாட்டத்தையிட்டு  பொழுதுபோக்கிற்காக குடும்பத்தவருடன் பொத்தானை வயல் பிரதேசத்துக்கு சென்றுள்ளான். பின்னர் பொத்தானைக்குளத்தில் நீராடியபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

உடனடியாக வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலைக்கு இந்தச் சிறுவனை  கொண்டுசென்றபோதிலும், காப்பாற்ற முடியாமல் போனதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4102

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.