«

»

ஜெயலலிதா விரைவில் சிறையில் இருந்து வெளியில் வரமாட்டார்!- சுப்பிரமணியன் சுவாமி

-jaya-swamy-ஜெயலலிதாவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கியதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்தியாவில் எதிர்காலத்தில் சுபிட்சமான ஜனநாயகம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசாங்கத்தரப்பு செய்தித்தாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா விரைவில் சிறையில் இருந்து வெளியில் வரமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உதவியுடனேயே தாம் அரசியலுக்கு வந்ததாக கூறப்பட்டாலும் தாம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கருணாநிதியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே ஜெயலலிதாவுடன் இணைந்து செயற்பட்டதாக சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதிக்கு பயந்து ஜெயலலிதா, ஹைதராப்பாத்தில் ஒளிந்திருந்தபோது தாமே அவரை சென்னைக்கு அழைத்து வரவும் இசெட் பாதுகாப்பை வழங்கவும் கருணாநிதியினால் சீல் வைக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை திறக்கவும் ஏற்பாடுகளை செய்ததாக சுவாமி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தியின் கொலையை அடுத்து ஏற்பட்ட அனுதாபத்தினால் ஜெயலலிதாவினால் அன்று ஆட்சியை அமைக்க முடிந்தது.

அன்று முதல் அவர் சர்வதிகாரியாகவும் பணத்துக்கு அடிமையானவராகவும் மாறினார்.

தம்மை ஜெயலலிதா 12 தடவைகளாக கொலை செய்ய முயற்சித்து தோல்வி கண்டதாகவும் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4116

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.