«

»

இலங்கையிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொள்ள விருப்பம்!-இந்தியா

mahinda_madur_meet_001இலங்கையிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மாதுர் தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆர்.கே.மாதுர் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளின் பல்வேறு இராணுவப் பிரிவுகளுக்கிடையிலான பயிற்சிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடினர்.

இலங்கையிடமிருந்து ஏராளமான பல விடயங்களை  தாங்கள் கற்றுக்கொள்ள விரும்புவதாக மாதுர் இச்சந்திப்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அனுபவங்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்ததாகவும் மாதுர் கூறியுள்ளார்.

தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக, இரு நாடுகளிலுமுள்ள பாதுகாப்புப் பயிற்சி நிறுவனங்களில் வருகை விரிவுரையாளர்களையும், நீண்டகால பயிற்சியாளர்களையும் பரிமாற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை இலங்கையும் இந்தியாவும் ஆராயுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவின் ஆழ்கடல் மீன்பிடி காரணமாக இலங்கை மீனவர்கள், பிரதானமாக வடக்கு மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற 2வது வருடாந்த பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக மாதுர், இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் ராம் சுஹக் சிங், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் திருமதி சுசித்திரா துரை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி சேனுகா செனவிரத்ன, இலங்கைக் கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா ஆகியோரும் பங்கு பற்றியிருந்தனர்.

mahinda_madur_meet_001

mahinda_madur_meet_003

 

 

 

 

 

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4187

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.