«

»

திருகோணமலை சம்பூர் மக்களுக்கு அவசரமாக உதவுங்கள்- புலம்பெயர் அமைப்புக்களிடம் வேண்டுகோள்!

திருகோணமலை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் துயர் துடைக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கு வாகரை சூரிய உதயம் தொண்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.
திருகோணமலை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தங்களது நாளாந்த உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் சமூக,பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால் இவர்களுக்கான உடனடி உதவிகளைச் செய்ய புலம்பெயர் அமைப்புக்கள் முன்வரவேண்டுமென வாகரை சூரிய உதயம் தொண்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.
எனவே தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும்; பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவும் தொண்டர் அமைப்புக்களே உடனடியாக திருகோணமலை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் துயர் துடைக்க முன்வருமாறு எங்கள் தேசம் இணையத்தளம் தங்களிடம் பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றது.

தொடர்புக்கு:-
தேசத்தின் பாலம்
தொலைபேசி இல- 0044744871072, 00447405146087

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=448

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.