«

»

மைத்திரிபால அரசாங்கத்தின் குழப்பகரமான சமிக்ஞைகளால் இந்தியா கவலை !

modi_and_maithri_11இலங்கையின் புதிய அரசாங்கத்திடமிருந்து வெளிப்படும் சில குழப்பகரமான சமிக்ஞைகளால் இந்திய அரசாங்கம் கவலை அடைந்துள்ளதாக டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. 


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயத்திற்கான ஏற்பாடுகளை புதுடில்லி மேற்கொண்டுள்ள அதேவேளை ,தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பாக கொழும்பிலிருந்து வரும் குழப்பகரமான சமிக்ஞைகள் சிக்கலை தோற்றுவித்துள்ளது என்கிறார்கள். 

தேர்தல் நடைபெற்ற வேளையில் சீனாவின் அனைத்து திட்டங்களையும் தாம் மீள் பரிசீலனை செய்யவுள்ளதாக மைத்திரி அறிவித்தார். அவரது ஆதரவாளர்கள் , சீனாவை முற்றாக எதிர்பது போன்ற தோற்றப்பட்டில் இருந்தார்கள். ஆனால் அந்த நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது.

எங்களது தரப்பிலிருந்து சிறிசேன அரசாங்கம் குறித்து பலத்த எதிர்பார்ப்புள்ளது, அவரது விஜயம் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும் என எதிர்பார்க்கிறோம், என தெரிவித்துள்ள இலங்கை விவகாரங்களில் பரீட்சயம் உள்ள மூத்த இந்திய அதிகாரியொருவர், எனினும் சில முக்கிய விடயங்களில் தெளிவின்மை காணப்படுகின்றது, அது குறித்த தெளிவுபடுத்தல்களுக்காக காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் புதிய அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ள போதிலும், முன்னைய அரசாங்கத்தினால் தடுக்கப்பட்ட இந்திய உதவியுடனான பல திட்டங்களுக்கு புதிய அரசாங்கம் அனுமதி வழங்குவதற்காக புதுடில்லி காத்திருக்கின்றது என்றும் குறித்த அந்த இந்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த குழப்பகரமான சூழல் என்று இந்தியா சொல்வது , மைத்திரி இந்தியாவுக்கும் விஜயம் செய்கிறார் அதேவேளை அவர் சீனாவுக்கும் செல்லவுள்ளார். மேலும் சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டம் ஒன்றை அவர் முன்னர் எதிர்த்தார். தற்போது அதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 

இதன் காரணமாகவே இந்தியா குழம்பிப்போய் உள்ளது என்கிறார்கள். இது இந்தியாவை மட்டும் அல்ல , அமெரிக்காவையும் குழப்பும் செயலாகவே அமைகிறது. இன் நிலை நீடித்தால் என்ன நடக்கும் என்று எவராலும் கற்பனை செய்து பார்க முடியாது போலவுள்ளதே.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4621

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.