«

»

கொக்கட்டிச்சோலையில் மருதம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பினால் நடத்தப்படும் தையல் பயிற்சி நிலையம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மண்முனை தென்மேற்கு , பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் “மருதம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு” யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமையான பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம் ஒன்றை நடாத்திவருகின்றனர்.
பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் நடைபெற்றுவரும் இத் தையல் பயிற்சி நிலையத்தினை கொக்கட்டிச்சோலை “மருதம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு” நடாத்திவருவதுடன் பயிற்சி நிலையத்திற்கான நிதியினை அணுசரனையாளர்களான லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கிவருகின்றது.

மேற்படி பயிற்சியில் கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை பிரதேசங்களைச் சேர்ந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இணைக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகளை இலவசமாக செய்து வருகின்றனர்.

மேற்படி தையல் பயிற்சி நிலையத்தின் ஆரம்ப நிகழ்வு சம்பந்தமான படங்களும் தகவல்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மருதம் பெண்கள் அபிவிருத்திஅமைப்பு நிறுவனம் அமுல்படுத்தும் தையல் பயிற்சி
அங்குரார்ப்பண அறிக்கை

 மாவட்டம் : மட்டக்களப்பு
 பிரதேசசெயலகப்பிரிவு : மண்முனைதென்மேற்கு,பட்டிப்பளை.
 நிறுவனம் : மருதம் பெண்கள் அபிவிருத்திஅமைப்பு (MAFDO),கொக்கட்டிச்சோலை.
 இடம் :MAFDO நிறுவன மண்டபம்
 தலைமை : தவராசாஉசேந்தி (தலைவர் MAFDO நிறுவனம்)

நிகழ்வுதொடர்பானசுருக்கம் :MAFDO நிறுவனம் மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலகப் பிரிவில் மிகவும் வறியநிலையில் பாதிக்கப்பட்டபெண்கள் ,யுவதிகளுக்கு அவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் 03 மாதகால தையல் பயிற்சி நெறியொன்றை செயற்படுத்தியுள்ளது. அது ஆரம்பிக்கப்பட்டது தொடர்பான அறிக்கை.

எமதுநிறுவனம் அமுல்படுத்தும் தையல் பயிற்சிநெறியின் முதல் நிகழ்வாக வருகைதந்த பிரதேசசெயலாளர் ,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ,சமூகசேவை உத்தியோகத்தர் ,கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோரினைவரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது அதில் தலைமை தாங்கிநடாத்திக் கொண்டிருந்த தலைவர் த. உசேந்தி அனைவரையும் வரவேற்றதுடன் தங்களது நிறுவன செயற்பாடுகள்’ தொடர்பாகவும் இந்ததையல் பயிற்சி தொடர்பாகவும் சுருக்கமாக விளக்கியிருந்தார். அதில் அவர் எமது திட்டம் வெற்றியளிக்க வேண்டுமாயின் பங்குபற்றுனர்கள் அனைவரும் தவறாது சமூகம் கொடுத்து பூரணமான பயிற்சியினைப் பெற்று இப்பயிற்சி நெறியினை பூர்த்திசெய்தல் வேண்டும் எனவும் இதன் மூலம் பெற்ற

பயிற்சியினைக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தபயன்படுத்த வேண்டும் எனவும் கூறினார். மேலும் இவ்வாறான பலதிட்டங்கள் எதிர்காலத்தில் எமது பகுதிக்குகிடைக்க தங்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் கூறிதனது உரையை நிறைவுசெய்தார்.
மேலும் சமூகசேவை அலுவலர் எஸ்.மதிதயன் உரையாற்றுகையில் எமது பிரதேசம் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி எனவும், கூடியளவு விதவைப் பெண்களைக் கொண்டது எனவும் இவ்வாறான பெண்கள் மிகவும் வறிய நிலையில் வாழ்வதாகவும் கூறினார். இதனால் இவ்வாறான செயற்திட்டங்களில் பங்குபற்றுபவர்கள் தமது எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தி உயர்த்திக்கொள்ள பயிற்சியின் பின்னர் அதனைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தாங்கள் குழுவாகதையல் நிலையங்களைத் திறப்பது வெற்றியளிக்கும் எனவும் கூறியதுடன் இவ்வாறான குழச் செயற்பாட்டை MAFDO நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளவது நன்மையளிக்கும் எனவும் கூறினார்.

தொடர்ந் துஉதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. ஜெ.கணேசமூர்த்தி உரையாற்றுகையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இவ்வாறான பயிற்சிகள் பெரிதும் உதவியளிப்பதாகவும், இதனை வெறும் பொழுதுபோக்காகக் கொள்ளாமல் பொறுப்புடன் ஒத்துழைத்து சிறந்தபயிற்சியினைப் பெற்று ஏனையோரில் பெண்கள் தங்கியிருப்பததைத் தவிர்த்த முன்மாதிரியாகச் செயற்பட வேண்டுமெனக் கூறினார்.

மேலும் கிராமஅலுவலர் தேவானந்தம் தனதுஉரையில் MAFDO அமைப்பு கடந்தகாலங்களில் பல சவால்களை எதிர் கொண்டாலும் தற்போது சிறப்பாக செயற்படத் தொடங்கியுள்ளது. இது நிலைத்திருக்க பங்குபற்றுனர்கள் சிறப்பாக ஒத்துழைத்து நல்லபயனைப் பெற்றுக்கொள்ளவேண்டுமெனவும் ,நிறுவன எதிர்கால வளர்ச்சிக்கு தங்களது ஒத்துழைப்பும் விழிப்புணர்வும் அவசியம் எனக் கூறினார்.

மேலும் இப்பயிற்சி நெறியினை நடாத்தும் பயிற்சி ஆசிரியர் தனதுஉரையில் பயிலுனர்கள் மிகவும் ஆர்வத்துடன் பூரணவரவுடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும், தான் அனைத்து விதமானதையல் ;முறைகளையும் பயிற்றுவிக்கதயார் எனவும் கூறினார்.
தொடர்ந்து பிரதேசசெயலாளர் உரையாற்றுகையில் இந்த நிறுவனமானது பல்வேறுசவால்களை எதிர் கொண்டதாகவும் இதற்குமுன்பு இருந்ததலைவர்கள் பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவித்ததாகவும்,தற்போது திறமையான நேர்மையான தலைவர் கிடைத்தள்ளதாகவும் நம்பிக்கையுடன் பல்வேறுதிட்டங்கள் நடைபெறுவதாகவும் கூறினார். மேலும் இந்ததையல் பயிற்சியில் திறமைகளை வெளிப்படுத்தி பூரணமாக பயிற்சிகளை முடிப்பவர்களுக்கே எதிர்காலத்தில் ஏதாவது உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறியதுடன்,தற்போது அரிசி ஆலைசிறப்பாக இயங்குவதாகவும் இதற்கும் எதிர்காலத்தில் செயற்படுத்தும் பல்வேறுதிட்டங்களுக்கும் தாங்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கூறினார்.

பின்னர் பிரதேசசெயலாளர் ,உதவித்திட்டமிடல் பணிப்பாளர், சமூகசேவை உத்தியோகத்தர் ஆகியோர் பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடினர்.

இறுதியாக நன்றியுரையுடன் ஆரம்பவைபவம் நிறைவுற்றதையடுத்து பயிற்சி வகுப்பு ஆரம்பமாகி இடம்பெற்றது.

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=471

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.