«

»

மனித குலத்துக்கு பெண்கள் வழங்கும் பங்களிப்பை பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்….

Maithripala-Gampola-2014மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டும் எமது கலாசார பின்னணியுடன், மனித குலத்துக்கு பெண்கள் வழங்கும் பங்களிப்பை நாம் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் இன்று கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
‘மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டும் எமது கலாசார பின்னணியுடன் மனித குலத்துக்கு பெண்கள் வழங்கும் பங்களிப்பை நாம் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
பெண்களுக்கு பிறப்பிலேயே உரித்தான தாய்மைக் குணம், மென்மைத்தன்மை, காருண்யம் மற்றும் தயாள குணம் போன்ற இயல்புகள் மூலம் எமது சமூகத்தின் செயற்பாட்டுக்கும் முன்னோக்கிச் செல்வதற்கும் கிடைக்கும் பங்களிப்பு தொடர்பாக சீர்தூக்கிப் பார்க்க இது போன்ற தினம் முக்கியமானதாகும்.
சமூகமாற்றத்துடன் கூடிய இந்த நவீன யுகத்தில் பெண்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.
உலகெங்குமுள்ள பெண்களுக்கு கிடைக்க வேண்டிய முறையான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
எமது நாட்டு பெண்களுக்கு முறையான கௌரவத்தையும் நியாயமான இடத்தையும் வழங்கும், நல்லதொரு நாட்டை உருவாக்கும் நாளைய தினத்துக்காக பிரார்த்திக்கின்றேன்’ என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4771

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.