«

»

12 வருடங்கள் இலங்கைப் பெண் சவுதியில் அடிமை வாழ்க்கை

nagaikum-vanmurai12 வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்று 11 வருடங்களாக சம்பளமும் விடுமுறையும் கிடைக்காது இருந்த இலங்கை பெண்ணொருவர் தூதரக அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் கிழக்கு அல் கோபார் பிரதேசத்தில் தூதரக அதிகாரிகள் நடத்திய நடமாடும் சேவையின் போது அனுராதபுரத்தை சேர்ந்த இந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெண்ணுக்கு புதிய கடவுச்சீட்டு ஒன்றை பெறுவதற்காக பெண்ணின் எஜமான் என கூறப்படும் நபர் தனது மனைவியுடன் பெண்ணை அழைத்து வந்திருந்தார்.
இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் நல அதிகாரி ரொஷான் குணவர்தன, பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் 12 வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக இருப்பதும் 11 வருடங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4783

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.