«

»

மட்டக்களப்பில் வறுமையான மாணவர்களுக்கு கல்விப்பணியாற்றும் மாமாங்கம் சரஸ்வதி கல்வி நிலையம்!

மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியில் வாழும் வறுமையான மாணவர்களின் கல்வியை விருத்திசெய்யும் நோக்குடன் அவர்களுக்கான நாளாந்த கல்விச் சேவையினை மாமாங்கம் சரஸ்வதி கல்வி நிலையம் மேற்கொண்டு வருகின்றது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பணியாற்றிவரும் இக் கல்வி நிலையத்தின் நிர்வாகத்தினை தற்போது சேவகம் நிறுவனம் பொறுப்பேற்று நடாத்திவருவதுடன் இக் கல்வி நிலையத்திற்கான நிதியினை அணுசரனையாளர்களா லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கிவருகின்றது.

இக்கல்வி நிலையத்தில் சுமார் முப்பதுக்கு மேற்பட்ட வறுமையான மாணவர்கள் கல்வியை மேற்கொண்டு வருவதுடன் இவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இருந்தும் இவர்களுக்கான இடம்,தளபாட வசதிகள்

இல்லாமை இம்மாணவர்களின் கல்விச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இவர்களுக்கான மேற்படி வசதிகளை செய்து தருவதற்கு தொண்டர்களும், தொண்டு அமைப்புக்களையும் முன்வருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி கல்வி நிலையத்தின் தேவைகளை பூர்த்திசெய்து இங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்வதற்கு முன்வருமாறு புலம்பெயர் தேசத்து எம் உறவுகளுக்கு எங்கள் தேசம் இணையத்தளம் பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=488

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.