«

»

180 நாள்களுக்குள் வீதி விபத்துக்களினால் 53 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.

accident
180 நாள்களுக்குள் வீதி விபத்துக்களினால் மட்டக்களப்பில் 53 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் என். சசிநந்தன் தெரிவித்துள்ளார்.

மே 4 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை வீதிப்பாதுகாப்பு வாரம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கமைய கடந்த 6 ஆம் திகதி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தில் இதன் ஆரம்பவிழா கொண்டாடப்பட்டது.

இதன்போது, வீதிகளில் பயணிக்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டியுள்ள வீதிச் சட்டங்களில் பின்பற்றப்பட வேண்டியுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5457

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.