«

»

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை

Jayalalithaa
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மேன் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது கர்நாடக உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் இறுதி நாளான இன்று கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலருமான ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவரின் உறவினர்கள் சுதாகரன் இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றில் 18 ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும் தலா நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும் மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் உடனடியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றம் அளித்த பிணையின்அடிப்படையில் நான்கு பேரும் வெளியில் வந்தனர்.
நீதிமன்ற தீர்ப்பு மீது கேள்வி எழுப்பி ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் கர்நாடகா உயர் நீதிமன்றில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பாக 41 நாட்கள் விசாரணையை நிறைவு செய்த நீதிபதி குமாரசாமி இன்று காலை 11:00 மணிக்கு தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் தமிழகம் எங்கும் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று காலை முதல் வணக்கஸ்தலங்களில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்று வந்தன. ஜெயலலிதா விடுதலையான செய்தி அறிந்தவுடன் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5463

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.