«

»

மட்டு – செங்கலடியில் சேவகம் நிறுவனத்தால் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வகுப்பறை முகாமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவகம் நிறுவனம் நடாத்தும் கல்வி நிலையங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒருநாள் வகுப்பறை முகாமைத்துவ பயிற்சி நெறி நேற்றையதினம் நடாத்தப்பட்டது. செங்கலடி கணபதிப்பிள்ளை கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம்(01.09.2012) நடைபெற்ற இன்நிகழ்வை சேவகம் நிறுவனத் தலைவர் திரு.எஸ்.நிலாந்தன் தலைமைதாங்கி நடத்தினார்.
இங்கு ஆசிரியர்களுக்கான வகுப்பறை முகாமைத்துவம் செயற்பாட்டுக் கல்வி முறை சிறுவர்களுக்கான சித்திரம் வரைதல் சிறுவர்களுக்கான பாடல்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பாடல் பயிற்சி சேவை மனப்பாங்குடன் கூடிய இலக்கை நோக்கிய கல்வி போன்ற பல கற்பித்தல் சம்பந்தமான பயிற்சிகளை ஆசிரியர் திருமதி. சுதாகரி மணிவண்ணன் அவர்களும் திரு.க.நிமல்தாசன் அவர்களும் திரு.சுவர்னேஸ்வரன் அவர்களும் நடாத்தினர்.இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமையான மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சேவகம் நிறுவனத்தினால் நடாத்தப்படும் கல்வி நிலையங்களான கதிரவெளி பால்சேனை கலைவாணி கல்வி நிலையம், கதிரவெளி பால்சேனை சூரிய உதயம் கல்வி நிலையம், மட்டக்களப்பு மாமாங்கம் சரஸ்வதி கல்வி நிலையம், களுவன்கேணி கலைமகள் கல்வி நிலையம், வெருகல் சூரநகர் ஸ்ரீ சித்தி வினாயகர் கற்கை நிலையம், மாவடிவேம்பு சேவகம் கணனி வள நிலையம் போன்ற கல்வி நிலையங்களைச் சேர்ந்த 20ற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்.

இப் பயிற்சி நெறிக்கான நிதியினை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கியதுடன் பயிற்சி நெறியினை சேவகம் நிறுவனத் தலைவரும் நிர்வாகத்தினரும் தலைமை தாங்கி நடத்தினர்.

 

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=548

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.