«

»

முதலமைச்சராக மீண்டும் ஜெயலலிதா…

Jaya_646918f
சென்னையில் இன்று நடைபெறவுள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் புதிய முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட உள்ளார்.என்று இந்திய செய்திகள் இவ்வாறு தெரிவித்துள்ளன.

பெங்களூர் தனிக் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரணை செய்த கர்நாடக நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் கடந்த 11ஆம் திகதி விடுதலை செய்தது.

இதன் மூலம், ஜெயலலிதாவுக்கு முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு ஏற்பட்டிருந்த தடை விலகியது.

இந்த நிலையில். அந்த கட்சி உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை இடம்பெறவுள்ள நிலையில். இதன்போது ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட உள்ளார்.

இவ்வாறு முதலமைச்சராக மீண்டும் தெரிவு செய்யப்படும் அவர் நாளைய தினம் முற்பகல் 11 மணியளவில் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5615

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.