«

»

படிப்பகம் மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பினால் விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நடத்தப்பட்டது!

யுத்த பாதிப்புக்குள்ளான வாகரை,கதிரவெளி பால்சேனை படிப்பகம் மாணவர்களுக்கு இயல்வு வாழ்க்கையை ஏற்படுத்தி கல்வியில் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் சூரிய உதயம் அமைப்பினர் விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளனர்.

சூரிய உதயம் நிறுவனத்தினால் நடத்தப்படும் படிப்பகம் மாணவர்களுக்கும், கதிரவெளி பால்சேனை விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் நடத்தப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் பிரதேச செயலாளர், பிரதேச பொலீஸ் அதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இங்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட படிப்பகம் சிறுவர்க பலர் விளையாட்டுக்களில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டியதுடன் மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

அத்துடன்; வாகரை கண்டலடி பிரதேசத்தினை சேர்ந்;த யுத்தத்தில் கணவனை இழந்த இரண்டு குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம் படுத்தும் நோக்கில் ஆடு வழங்குவதற்கான உறுதிப்பத்திரமும் சூரிய உதயம் அமைப்பினால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு அணுசரனையாளர்களான லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு நிதி யுதவிகளை வழங்கியிருந்தனர்.

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=603

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.